ஜெருசலேம் அல்அக்ஸா பள்ளிவாசல் மீது தாக்குதல்... இஸ்ரேலுக்கு த.மு.மு.க. கடும் கண்டனம்..!
சென்னை: ஜெருசலேத்தில் உள்ள அல்அக்ஸா பள்ளிவாசல் மீது இஸ்ரேல் காவல்துறை நடத்திய தாக்குதலுக்கு த.மு.மு.க. தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் காட்டுமிராண்டித் தாக்குதலை இந்தியா வன்மையாக கண்டிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

முஸ்லீம்கள்
முஸ்லிம்களின் மூன்றாவது புனிதப் பள்ளிவாசலான ஜெருசலேம் அல்அக்ஸா பள்ளிவாசல் மீது பயங்கரவாத இஸ்ரேலின் காவல்துறை கடந்த 7.5.2021 வெள்ளி அன்று காட்டுமிராண்டித்தனமான தாக்குதலைத் தொடுத்து 170 பாலஸ்தீனர்களைப் படுகாயப்படுத்தியதோடு, மூன்று பேரைப் படுகொலையும் செய்துள்ளது. இஸ்ரேலின் இந்த ஈனத்தனமான தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

குத்ஸ் தினம்
புனித ரமலானின் கடைசி வெள்ளிக்கிழமை பாலஸ்தீனத்திற்கு ஆதரவான குத்ஸ் தினமாக ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு கடந்த வெள்ளிக்கிழமை அன்று மாலைத் தொழுகைக்குப் பிறகு பாலஸ்தீன ஆதரவு தினத்தைக் கடைப்பிடித்த ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் மீது பயங்கரவாத இஸ்ரேலின் காவல்துறையினர் காட்டுமிராண்டித் தாக்குதல் நடத்தியதோடு, புனித அல்அக்ஸா பள்ளிவாசலையும் சேதப்படுத்தியுள்ளனர்.

பாலஸ்தீனர்கள்
பாலஸ்தீனர்களை அவர்களது சொந்த மண்ணிலிருந்து வெளியேற்றும் இஸ்ரேலிய அராஜகம் மீண்டும் தலைதூக்கியுள்ளது. ஒரு தேசத்தின் குடிமக்களை தாக்குதல் நடத்தி வெளியேற்றுவது போர்க்குற்றம் என்ற ஐ.நா.சபையின் எச்சரிக்கைகளை மீறி, மண்ணின் மைந்தர்கள் மீது சியோனிச பயங்கரவாத இஸ்ரேல் தாக்குதல் தொடுத்து வருகிறது.

வலியுறுத்தல்
இதை இந்தியா வன்மையாகக் கண்டிக்க வேண்டும். உலக நாடுகள் அனைத்தும், பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தமது ஆதரவுக் கரத்தை நீட்ட வேண்டும். இவ்வாறு த.மு.மு.க. தலைவரும் பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா தமது அறிக்கையில் கூறியிருக்கிறார்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications