ஈஸி ஈ பாஸால் என்ன பிரயோஜனம்?.. காருக்கு ஆயிரக்கணக்கில் செலவு.. பஸ் விட்டால் தேவலை.. குமுறும் மக்கள்
சென்னை: தமிழகத்தில் ஈ பாஸ் நடைமுறை எளிமைப்படுத்தப்பட்டுள்ளதால் மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கு ஏராளமானோர் சென்று வருகிறார்கள். எனினும் கார் உள்ளிட்ட வாகனங்களுக்கு ஆயிரக்கணக்கில் செலவிடுவதால் பேருந்துகளை இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
Recommended Video
கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக மக்கள் மாவட்டத்தை விட்டு மாவட்டம் சென்று பரவலை மேலும் அதிகரித்துவிடக் கூடாது என்பதற்காக பிறப்பு, இறப்பு, திருமணம், இறுதி சடங்கு ஆகியவற்றுக்கு மட்டுமே ஈ பாஸ் எடுத்துக் கொணடு மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல அனுமதி வழங்கப்பட்டு வந்தது.
இந்த நடைமுறையை நீக்குமாறு பெரும்பாலான கோரிக்கைகள் எழுந்தன. இதையடுத்து இ பாஸ் நடைமுறையில் தளர்வுகளை தமிழக அரசு நேற்று முதல் அமலுக்கு வந்தது. ஆன்லைனில் விண்ணப்பித்தோருக்கு உடனுக்குடன் இ பாஸ் வழங்கப்பட்டது.

சென்னை
இதனால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். இதையடுத்து சென்னையிலிருந்து மற்ற மாவட்டங்களுக்கும், மற்ற மாவட்டங்களிலிருந்து சென்னைக்கும் பெரும்பாலானோர் திரண்டனர். இதையடுத்து பரனூர் சுங்கச்சாவடி உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மகிழ்ச்சி
இ-பாஸ் எளிதாக கிடைத்ததாலும், போலீஸ் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளின் கெடுபிடி இல்லாததாலும் மக்கள் மகிழ்ச்சியுடன் பயணம் மேற்கொண்டனர். இந்நிலையில் தமிழகத்தில் விண்ணப்பித்த அனைவருக்கும் இ-பாஸ் என்ற நடைமுறை அமலுக்கு வந்த நிலையில், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல ஒரே நாளில் 1.20 லட்சம் பேர் இ-பாஸ் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா
நாள்தோறும் ஏராளமானோர் ஒரே நேரத்தில் சென்னைக்கு வருவதும், சென்னையிலிருந்து போவதுமாக இருக்கிறார்கள். இதனால் கொரோனா பரவும் அபாயம் உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். எனினும் இது போல் ஈ பாஸ் முறை எளிமையானதால் 5 மாதங்களாக வெளி மாநிலங்களிலும், வெளி மாவட்டங்களிலும் பணியாற்றும் நபர்கள் உற்சாகமடைந்துள்ளார்கள்.

பேருந்து
கடந்த 4 மாதங்களாக தாய், தந்தை, அக்காள், தங்கை, மனைவி, குழந்தைகளை பார்க்க முடியாதவர்கள் இந்த எளிய முறைய ஈ பாஸ் மூலம் சென்று அவர்களை பார்த்ததில் ஆனந்த கண்ணீர் விட்டனர். ஈ பாஸ் எளிமையானாலும் முக்கிய பணிகளுக்காக காரில் பயணம் செய்ய வேண்டியுள்ளது. இதற்காக ஆயிரக்கணக்கில் செலவிட வேண்டியதாக மக்கள் வேதனை தெரிவிக்கிறார்கள். ஏற்கெனவே வேலையில்லாமல் வாடகை உள்ளிட்ட இதர செலவுகள் கை கடிப்பதாகவும் மக்கள் வருத்தம் தெரிவிக்கிறார்கள். எனவே அரசு பேருந்துகளை கணிசமாக இயக்க வைக்க வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாகும்.
-
பத்திரப்பதிவு செய்ய இனி சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம்! தமிழக அரசு அதிரடி! -
செந்தில் பாலாஜி கைதாகிறாரா? தவெக கடிதத்திற்கு ஓகே சொன்ன ஆளுநர்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
Annamalai: பாஜக தலைவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை! அண்ணாமலை உருக்கம்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம் -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங்












Click it and Unblock the Notifications