உடம்பு சரியில்லை.. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கிறேன்.. ஆர்.பி.வி.எஸ் மணியன் பிரமாண பத்திரம் தாக்கல்
சென்னை: அம்பேத்கர், திருவள்ளுவர் குறித்து அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட விஷ்வ ஹிந்து பரிஷத் முன்னாள் துணைத்தலைவர் ஆர்.பி.வி.எஸ் மணியன் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். அவர் மன்னிப்பு கேட்டு மனு தாக்கல் செய்திருந்தாலும், அவரை ஜாமீனில் விடக்கூடாது என தமிழ்நாடு காவல்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் மாநில துணைத் தலைவரும், விவேக பாரதி அமைப்பின் நிறுவனருமான ஆர்.பி.வி.எஸ் மணியன், கடந்த 11ம் தேதி தி.நகரில் நடைபெற்ற கூட்டத்தில், பாரதியும் விவேகானந்தரும் என்ற தலைப்பில் உரையாற்றியிருந்தார். அப்போது திருவள்ளுவர், அம்பேத்கர் மற்றும் பட்டியல் சமூகத்தினர் குறித்து இவர் தெரிவித்த கருத்துக்கள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து இவர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மத்திய சென்னை முன்னாள் மாவட்ட தலைவர் இரா.செல்வம் புகாரளித்தார்.

இந்த புகாரையடுத்து மணியன் மீது, பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறாக பேசுதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த மாம்பலம் காவல்துறையினர் அவரை கைது செய்தனர். 15 நாட்கள் நீதிமன்ற காவலில் உள்ள மணியன் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். அவரது தரப்பில் வழக்கறிஞர் ஆர்.சி பால் கனகராஜ் ஆஜராகி உடல்நிலை மற்றும் வயதை கருத்தில் கொண்டு அவரை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
அவர் பேசியதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு மனு தாக்கல் செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார். அவரது பேச்சு தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்றும், பேசியது சரியா? தவறா? உள்நோக்கம் கொண்டதா? இல்லையா என்று குறித்து தற்போது வாதிட விரும்பவில்லை என்றும் தெரிவித்தார். அவருக்கு சிறுநீரகப் பிரச்சினை மயக்க பிரச்சனை உள்ளதால் அவரை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இதற்கு காவல்துறை சார்பில் ஆஜரான சிட்டி பப்ளிக் ப்ராஸிக்யூட்டர் ஆர்.தேவராஜ், ஆர்.பி.வி.எஸ் மணியன் அரசியலமைப்பின் தந்தை அம்பேத்கர் உள்ளிட்டோரை அவதூறாக பேசி உள்ளதாகவும், மருத்துவ காரணங்களுக்காக ஜாமீனில் விட முடியாது என்று ஏற்கனவே இதே நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதையும் சுட்டிக்காட்டினார்.
சிறை மருத்துவமனையில் அனைத்து சிகிச்சைகளும் வழங்கப்பட்டு வருவதாகவும், தேவைப்பட்டால் அரசு ஸ்டான்லி உள்ளிட்ட மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க தயார் என்றும் தெரிவித்தார். ஜாமீனில் வெளியே விட்டால் இது போல் தொடர்ந்து பேசுவார், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்றும் அவரை ஜாமீனில் விடக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார்.
இதே போல புகார்தாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பார்வேந்தன் பத்து முறைக்கு மேல் இதுபோல், பேசிவிட்டு மன்னிப்பு கேட்டுள்ளதாலும் எனவே இவரை ஜாமீனில் விடக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தார். அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதி, தீர்ப்பினை திங்கட்கிழமைக்கு ஒத்தி வைத்துள்ளார்.
-
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications