உஷாரய்யா, உஷாரு.. தமிழக போலீசுக்கு 10,000 புது லத்திகள் வாங்க முடிவு!
சென்னை: தமிழக போலீசாருக்கு, ரூ.17 லட்சம் செலவில் 10,326 லத்திகள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாரிடம் தவறாமல் இடம் பெற்றிருக்கும் இரு அம்சங்கள், லத்தியும், விசிலும்தான். விசில் ஊதுவது எச்சரிக்கைகாகவும், எல்லை மீறும்போது அடிக்க லத்தியும் பயன்படுத்தப்படுகிறது.

தமிழக காவல்துறையினர் பயன்படுத்தும், லத்திகளும், விசில்களும் பழையதாகிவிட்ட நிலையில், காவல்துறையை நவீன மயமாக்கும் திட்டத்தின் கீழ் சட்டம், ஒழுங்கு பிரிவு காவல்துறையினருக்கு, புதிதாக லத்திகள், விசில்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மொத்தம், 10 ஆயிரம் லத்திகள், 26 ஆயிரம் விசில்கள் வாங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு லத்திக்கான விலை எவ்வளவு தெரியுமா? ஒரு லத்தி விலை ரூ.165 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ரூ.17 லட்சம் செலவில் 10 ஆயிரத்து 326 லத்திகள் வாங்கப்படுகிறது. 26 ஆயிரத்து 196 விசில்கள் வாங்க முடிவு செய்யப்பட்டு ரூ.13 லட்சம் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
ஜூலை மாதம் முதல் புதிய லத்திகளும், விசில்களும் வழங்கப்பட உள்ளன. எனவே, விஷமிகளே, ஜாக்கிரதை. நீங்கள் பொதுமக்களுக்கு ஏதாவது தொல்லை கொடுத்தால், புதிய லத்திக்கள் உங்களை பதம் பார்க்க கூடும்.
-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன?












Click it and Unblock the Notifications