சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

Breaking News: கூட்டணி ஓவர்.. தனக்கு 20.. கூட்டணிக் கட்சிகளுக்கு 20 ஒதுக்கியது திமுக!

Google Oneindia Tamil News

சென்னை: லோக்சபா தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில், அரசியல் களம் இன்று மீண்டும் சூடுபிடித்துள்ளது.

ஒருபக்கம் விஜயகாந்த் தலைமையில் தேமுதிகவினர் தீவிர ஆலோசனை நடத்திய நிலையில், மற்றொரு பக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் திமுக இடையே தொகுதி உடன்படிக்கை கையெழுத்தானது.

இதன்பிறகு, திமுக, மதிமுக நடுவே கூட்டணி உடன்படிக்கை கையெழுத்தானது. இன்னும் பல அரசியல் பரபரப்பு செய்திகள் வந்த வண்ணம்தான் இருக்கப்போகின்றன. இது தொடர்பாக, உடனுக்குடன் நீங்கள் அறிந்துகொள்ள இந்த பக்கத்தில் இணைந்து இருங்கள்.

Newest First Oldest First
6:23 PM, 5 Mar

பல்வேறு தரப்பிலிருந்தும் அழைப்புகள் வந்தவண்ணம் உள்ளன - ஜவாஹிருல்லா தகவல்
6:23 PM, 5 Mar

தேர்தல் நிலைப்பாடு குறித்து முடிவெடுக்க அவசர தலைமை செயற்குழுக் கூட்டம் நடைபெறும் - ஜவாஹிருல்லா

மார்ச் 9ம் தேதி கூட்டம் நடைபெறும் - ஜவாஹிருல்லா தகவல்

கூட்டத்தில் எங்களது நிலைப்பாட்டை விரிவாக விவாதித்து எடுப்போம் - ஜவாஹிருல்லா

திமுகவிடம் சொந்த சின்னத்தில் போட்டியிட ஒரு இடம் கேட்டிருந்தோம் - ஜவாஹிருல்லா

6:23 PM, 5 Mar

வேறு சின்னத்தில் போட்டியிடுவது தேர்தல் ஆணைய விதிமுறைக்குப் புறம்பானது - ஜவாஹிருல்லா

தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினோம்.. இறுதியில் இடமில்லை என்று தெரிவித்தார்கள் - ஜவாஹிருல்லா

எதிர்காலத்தில் வாய்ப்புகள் தருவோம் என்று மு.க.ஸ்டாலின் கூறினார் - ஜவாஹிருல்லா

மனிதநேய மக்கள் கட்சிக்கு திமுக கூட்டணியில் சீட் தரப்படவில்லை

6:23 PM, 5 Mar

திமுக கூட்டணியில் சீட் தராதது வருத்தம் தருகிறது - ஜவாஹிருல்லா
1:35 PM, 5 Mar

மனித நேய மக்கள் கட்சிக்கு சீட் ஒதுக்கப்படவில்லை - ஸ்டாலின்

திமுக கூட்டணி ஆலோசனை முடிவிற்கு வந்துள்ளது - ஸ்டாலின்

மார்ச் 7ல் இருந்து எந்த தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது குறித்து ஆலோசிப்போம் - ஸ்டாலின்

இரண்டு நாட்களில் தொகுதிகள் அறிவிக்கப்படும் - ஸ்டாலின்

1:35 PM, 5 Mar

திமுக லோக்சபா தேர்தலில் 20 இடங்களில் போட்டியிடும் - ஸ்டாலின்

கூட்டணி கட்சிகளுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது - ஸ்டாலின்

1:35 PM, 5 Mar

திமுக தலைவர் ஸ்டாலின் சென்னையில் பேட்டி
1:34 PM, 5 Mar

திமுகவில் கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீடு முடிவடைந்தது

திமுக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது

கூட்டணிக் கட்சிகளுக்கு புதுவையையும் சேர்த்து 20 தொகுதிகள் ஒதுக்கீடு

திமுக கூட்டணி இட ஒதுக்கீடு - காங்கிரஸ் 10, விசிக 2, சிபிஎம் 2, சிபிஐ 2

மதிமுக, கொங்குநாடு மக்கள் தேசியக் கழகம், ஐஜேகே, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலா 1

1:20 PM, 5 Mar

திமுக - மதிமுக இடையே தொகுதி உடன்பாடு

மதிமுகவிற்கு 1 லோக்சபா தொகுதி, 1 ராஜ்யசபா சீட் ஒதுக்கீடு

மு.க ஸ்டாலின் - வைகோ இடையிலான ஒப்பந்தம் கையெழுத்தானது

12:59 PM, 5 Mar

அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலினுடன், வைகோ சந்திப்பு

தொகுதி உடன்பாடு தொடர்பாக திமுக-மதிமுக தலைவர்கள் இறுதிகட்ட பேச்சுவார்த்தை

12:41 PM, 5 Mar

யாருடன் கூட்டணி.. தேமுதிக நாளை அறிவிப்பு?

தேமுதிக நிர்வாகிகள் மத்தியில் விஜயகாந்த் மனைவி பிரேமலதா பேச்சு

நாளை அறிவிப்பு வெளியாகும் என பிரேமலதா பேசியுள்ளார்

12:35 PM, 5 Mar

முதல்வர் பழனிசாமி உடன் அன்புமணி ராமதாஸ் சந்திப்பு

தர்மபுரி மாவட்ட பிரச்சினைகள் குறித்து முதல்வரிடம் பேச்சு

பாஜக - பாமக இடையே சுமூக உறவு உள்ளது - அன்புமணி

பாமகவின் கோரிக்கைகளை அதிமுக அரசு நிறைவேற்றும் - அன்புமணி

7 தமிழர்கள் விடுதலை தொடர்பாக பாஜகவிடம் வலியுறுத்திக் கொண்டிருக்கிறோம்

12:20 PM, 5 Mar

கூட்டணி தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவசர ஆலோசனை

கோயம்பேட்டிலுள்ள கட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம்

12:20 PM, 5 Mar

திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள்

3வது கட்ட பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்பட்டது

Tamilnadu political news live updates

English summary
Tamilnadu politics seeing many development on Tuesday including DMK and Marxist Communist Party alliance and with a Vijayakanth party urgent meeting and many things. You can get live updates from this page, please stay tune with us.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X