Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திமுகவுக்கு எதிரான கூட்டணியில் பாமக.. அன்புமணி வெளியிட்ட கோட்வேர்டு.. அதிரும் அரசியல் களம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியல் கட்சிகள் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முழுவீச்சில் தயாராகிவிட்டன. ஆட்சியை தக்க வைக்க திமுகவும், ஆட்சியை பிடிக்க அதிமுக - பாஜக கூட்டணி, தவெக, நாம் தமிழர் கட்சிகள் முயற்சி செய்து வருகிறார்கள். இந்நிலையில் திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் கூட்டணியில் இடம்பெறுவோம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்திருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது.

பாட்டாளி மக்கள் கட்சியில் ராமதாஸ் அன்புமணி இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இதனால் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டு தனித்தனியாக செயல்பட்டு வருகிறார்கள். வார்த்தை போர் தொடங்கி கைகலப்பு வரை இரண்டு அணியினரும் தொடர்ந்து மோதிக் கொண்டிருக்கிறார்கள். இதனால் பாமக தொண்டர்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள். 2026 சட்டமன்ற தேர்தலில் பாமக என்ன நிலைப்பாட்டை எடுக்கப் போகிறது என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

tamilnadu-politics-we-will-contest-against-dmk-said-anbumani-ramadoss

அன்புமணி சஸ்பென்ஸ்

தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. பாமகவில் தந்தை, மகன் இணைவார்களா அல்லது தனித்தனி அணியாக தேர்தலில் போட்டியிடுவார்களா என்ற குழப்பம் நிலவுகிறது. சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அன்புமணி ராமதாஸ் மாநிலம் முழுவதும் 108 நாட்கள் பல்வேறு மாவட்டங்களில் அன்புமணி சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

இதுகுறித்து சென்னை எழும்பூர் பகுதியில் பாமக தலைவர் அன்புமணி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "அனைத்துத் தரப்பு மக்களும் திமுக மீது கோபத்தில் உள்ளனர். அதுவும் சாதாரண கோபம் கிடையாது. தேர்தலுக்காக மக்கள் காத்திருக்கிறார்கள். விவசாயிகள், பெண்கள், மீனவர்கள், அரசு ஊழியர்கள், நெசவாளர்கள், வணிகர்கள், தொழிலதிபர்கள், தொழிலாளிகள், மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைவரும் அதிருப்தியில் இருக்கிறார்கள் என்று சொல்ல மாட்டேன்.

மாற்றம் தேவை

அது சாதாரண வார்த்தை. மக்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். மக்களுக்கு நம்பிக்கையூட்டும் எதிர்க்கட்சி தேவை. எங்களின் நிலைப்பாட்டை நாங்கள் விரைவில் அறிவிப்போம். கடந்த 100 நாட்களாக கவனித்துக் கொண்டிருக்கிறேன். திமுக மீதான கோபத்தில் மக்கள் தேர்தலுக்காக காத்திருக்கிறார்கள். திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் கூட்டணியில் இடம் பெறுவோம். திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் பணியில் பாமக ஈடுபட்டுள்ளது. தமிழக மக்கள் குறித்து திமுகவுக்கு கவலை இல்லை.

தமிழகத்தில் மாற்றம் வர வேண்டும். அதுதான் நோக்கம். தீர்வு காணும் வரை போராட்டம் தொடரும். செய்யாறு சிப்காட்டிற்கு எதிராக போராடிய விவசாயிகளை திமுக கைது செய்துள்ளது. உலகத்திலேயே போராடிய விவசாயிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்த ஒரே அரசு திமுக தான். இப்படி ஒரு ஆட்சி தேவையா. சோறு போடும் கடவுள்களான விவசாயிகளை திமுகவை கைது செய்திருக்கிறது. திமுக மட்டுமல்லாமல் மத்திய பாஜக அரசு செய்யும் தவறுகளையும் சுட்டிக் காட்டி வருகிறோம்." என்றார்.

மீண்டும் மீண்டுமா

திமுகவுக்கு எதிரான கூட்டணி என்று அறிவித்திருப்பதால் பாமக அதிமுகவுடன் இணைய போகிறதா அல்லது தவெகவுடன் இணைய போகிறதா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏற்கனவே கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் பாமக தனித்து போட்டியிட்டது. அப்போது மாற்றம், முன்னேற்றம், அன்புமணி என்ற கோஷத்தை பாமக முன் வைத்தது. அதே போல 2026 தேர்தலிலும் அன்புமணி மாற்றம் என்று அறிவித்திருப்பது அரசியல் களத்தில் பரபரப்பை பற்ற வைத்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+