4ம் தேதி கன மழைக்கு வாய்ப்பு.. தமிழகம், புதுச்சேரியில்!
Subscribe to Oneindia Tamil
Recommended Video

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் வரும் 4-ஆம் தேதி மழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கி ஒரு மாதம் ஆகிவிட்டது. ஆரம்பத்தில் அவ்வப்போது மழை பெய்து வந்தது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் கஜா புயல் தாக்கியது. இதில் டெல்டா மாவட்டங்கள் இன்னும் சகஜ நிலைக்கு திரும்பவில்லை.

இந்நிலையில் வரும் டிசம்பர் 3, 4 ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுவையில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என இந்திய வானிலை மையம் அறிக்கை அனுப்பியுள்ளது. அதில் புதிய கிழக்கு திசை காற்று தமிழகம் மற்றும் புதுவையில் கடக்கவுள்ளது.
இதன் காரணமாக வரும் 3, 4 தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என கூறியுள்ளது. டிசம்பர் மாதம் வரை மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார். அவ்வாறு பெய்தால்தான் சென்னையில் கோடையை சமாளிக்க முடியும் என்று கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications