ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு.. 3 மாத அரிசி ஒரே நேரத்தில்.. 2 அதிரடி மாற்றங்கள் உஷார்
சென்னை: தமிழ்நாட்டில் ரேஷன் கார்டு வைத்திருக்கும் கோடிக்கணக்கான மக்களுக்கு ஏப்ரல் 2026 முதல் மிக முக்கியமான சில மாற்றங்கள் அமலுக்கு வந்துள்ளன. சட்டப்பேரவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள இந்த நேரத்தில், உணவு வழங்கல் துறையில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த புதிய நடைமுறைகள் பொதுமக்களிடையே பெரிய விவாதத்தை கிளப்பியுள்ளது. குறிப்பாக புதிய கார்டுக்காக காத்திருப்பவர்கள் மற்றும் மாதாந்தம் ரேஷன் கடைக்கு செல்பவர்கள் இந்த 4 விஷயங்களை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.
தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கார்டு பயனாளிகளுக்கு இந்த ஏப்ரல் மாதம் முதல் ஒரு மிகப்பெரிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இனிமேல் ஒவ்வொரு மாதமும் ரேஷன் கடைக்கு அலைந்து திரிய வேண்டிய அவசியம் இல்லை. ஏப்ரல், மே மற்றும் ஜூன் ஆகிய 3 மாதங்களுக்கு தேவையான அரிசி மற்றும் கோதுமை போன்ற உணவு தானியங்களை ஒரே தடவையில் பெற்றுக்கொள்ளலாம் என அரசாங்கம் சொல்லி இருக்கிறது.

மத்திய அரசின் கிடங்குகளில் உள்ள பழைய கோதுமை இருப்புகளை காலி செய்யவும், கோதுமை கொள்முதல் பணிகளை தொடங்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனால் வேலைக்கு போகிறவர்களுக்கும் கிராமப்புற மக்களுக்கும் இது பெரிய நிம்மதியை தந்துவிட்டது..
ஆதார் அப்டேட்
இன்னொரு பக்கம் e-KYC அப்டேட் செய்வது இப்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. உங்கள் ரேஷன் கார்டில் உள்ள எல்லா உறுப்பினர்களின் ஆதார் நம்பரை சரிபார்த்து இந்த கேஒய்சி அப்டேட்டை முடிக்க வேண்டும்.
ஒருவேளை நீங்கள் இதை செய்யவில்லை என்றால், வரும் நாட்களில் ரேஷன் பொருட்கள் வாங்குவதில் பெரிய சிக்கல் ஏற்பட வாய்ப்பு இருக்கு. இப்போது டிஜிட்டல் விநியோக முறை அல்லது e-POS மிஷின் மூலமாகவே பொருட்கள் வழங்கப்படுவதால், ஆதார் சரிபார்ப்பு இல்லாமல் பொருட்கள் தருவதை அரசு நிறுத்தி வருகிறது. போலி கார்டுகளை ஒழிக்கவே இந்த ஸ்ட்ரிக்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் சொல்கிறார்கள்..
புதிய கார்டு எப்போது?
புதிதாக ரேஷன் கார்டு கேட்டு ஆன்லைனில் விண்ணப்பித்த மக்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், புதிய கார்டுகளை அச்சிட்டு விநியோகம் செய்யும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அதனால் மே 4ம் தேதி தேர்தல் முடிவுகள் வந்த பிறகுதான் உங்களுக்கு புதிய கார்டு கைக்கு கிடைக்கும். கோயம்புத்தூர் போன்ற மாவட்டங்களில் மட்டும் மாதத்திற்கு 2,000 அப்ளிகேஷன்கள் வந்து கொண்டிருக்கின்றன. இப்போது விண்ணப்பிக்க தடையோ அல்லது சிக்கலோ இல்லை என்பதால், நீங்கள் இப்போதே ஆன்லைனில் அப்ளை செய்து வைப்பது நல்லது. தேர்தல் முடிந்ததும் சீனியாரிட்டி படி கார்டுகள் சீக்கிரம் கிடைக்கும்..
கார்டு தொலைந்து போயிடுச்சா? உஷார்
ரேஷன் கார்டு தொலைந்து போனவர்கள் அல்லது பெயர் திருத்தம் செய்ய விரும்புபவர்கள் TNPDS வெப்சைட் மூலமாக ஆன்லைனில் தொடர்ந்து வேலைகளை செய்யலாம். ஆனால் அப்ரூவல் கிடைப்பதில் கொஞ்சம் தாமதம் இருக்கும்.
தேர்தல் முடிவுக்கு பிறகு நிலுவையில் உள்ள எல்லா விண்ணப்பங்களும் 8 அல்லது 10 நாட்களில் பரிசீலிக்கப்படும் என அதிகாரிகள் சொல்கிறார்கள். அதனால் பொதுமக்கள் குழப்பம் அடையாமல் இப்போதே ஆன்லைனில் பதிவு செய்து கொள்வது புத்திசாலித்தனம். இந்த 3 மாத ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டத்தை பயன்படுத்தி மக்கள் கூட்டமாக கடைக்கு செல்வதை தவிர்க்கலாம் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications