ருத்ர தாண்டவம் ஆடும் கொரோனா... தமிழகத்தில் 3ஆம் நாளாக 2000ஐ கடந்த வைரஸ் பாதிப்பு.. 14 பேர் பலி
சென்னை: தமிழ்நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,279 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,81,752ஆக உயர்ந்துள்ளது.
Recommended Video

நாட்டின் பல்வேறு மாநிலங்களைப் போலவே தமிழ்நாட்டிலும் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. தேர்தல் நெருங்கும் நிலையில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் பிரசாரம், பேரணி, பொதுக்கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் வேட்பாளர்கள் உட்பட பெரும்பாலானோர் மாஸ்க்குகளை முறையாக அணிவதில்லை. இதனால் கொரோனா பாதிப்பு மீண்டும் பல மடங்கு அதிகரிக்கும் என்று வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

3ஆம் நாளாக 2000 கடந்த கொரோனா
இந்நிலையில் இன்று தமிழகத்தில் மூன்றாம் நாளாக கொரோனா பாதிப்பு 2000ஐ கடந்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,279 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,81,752ஆக உயர்ந்துள்ளது.

14 பேர் உயிரிழப்பு
இன்று மட்டும் மாநிலம் முழுவதும் சிகிச்சை பலனிற்றி 14 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,684ஆக அதிகரித்துள்ளது. அதேபோல தற்போது மாநிலம் முழுவதும் சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 13,983ஆக உள்ளது.

எத்தனை பேர் டிஸ்சார்ஜ்
இன்று மட்டும் சிகிச்சை முடிந்து 1,352 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 8,55,085 பேர் தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். மேலும், இன்று மட்டும் 80,704 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுவரை மாநிலம் முழுவதும் 1.94 கோடி பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சென்னை, கோவை அதிகம்
அதிகபட்சமாகச் சென்னையில் 815 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று 464 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். அதைத்தொடர்ந்து கோவையில் 211 பேருக்கும் செங்கல்பட்டில் 202 பேருக்கும் தஞ்சையில் 130 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 4 பேரும், சென்னை மற்றும் கோவையில் தலா இரண்டு பேரும் சிகிச்சை பலனிற்றி உயிரிழந்துள்ளனர்.
-
தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற பெண் செயலாளராக சாந்தி நியமனம்.. யார் இவர்? இவருடைய பவர் என்ன? -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு












Click it and Unblock the Notifications