இதுவரை இல்லாத அதிகரிப்பு.. தமிழகத்தில் ஒரே நாளில் 1286 பேருக்கு கொரோனா.. புது உச்சம் தொட்ட சென்னை
சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1286 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு இது அதிகபட்ச எண்ணிக்கையாகும்.
இன்று மாலை வெளியிடப்பட்டுள்ள சுகாதாரத்துறையின் புள்ளிவிவரத்தில் இந்த தகவல் உறுதியாகி உள்ளது. சென்னையில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை முதல் முறையாக ஆயிரத்தை தாண்டியுள்ளது.
1012 பேருக்கு இன்று ஒரே நாளில் சென்னையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில், கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 17598 என்ற அளவில் உள்ளது.

தமிழக பலி எண்ணிக்கை
நேற்று சென்னையில் 809 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். நேற்று முன்தினம், சென்னையில் 967 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே, தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 208ஆக உயர்ந்துள்ளது.

டிஸ்சார்ஜ்
தமிழகத்தில் இதுவரை 14316 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 610 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மகாராஷ்டிராவில் இருந்து வந்த 16 பேருக்கும், கர்நாடகாவில் இருந்து வந்த 2 பேருக்கும், டெல்லில் இருந்து வந்த 5 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

சாம்பிள்கள்
இதுவரை தமிழகத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 25,872 என்ற அளவில் உள்ளது. இன்றைய தினம் பரிசோதனை செய்யப்பட்ட சாம்பிள்கள் எண்ணிக்கை 14,101 ஆகும். இதுவரை சோதிக்கப்பட்ட சாம்பிள்கள் எண்ணிக்கை 5,28,534 ஆகும்.

செங்கல்பட்டு மாவட்டம்
இன்று பாதிக்கப்பட்டோரில் 787 பேர் ஆண்கள், 498 பேர் பெண்கள், திருநகங்கை ஒருவராகும். தமிழகத்தில் இன்று வரை 73 பரிசோதனை மையங்கள் உள்ளன. இன்று சென்னைக்கு அடுத்தபடியாக, அதிகப்படியான கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ள மாவட்டம் செங்கல்பட்டு. அங்கு 61 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் 58 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications