அடேங்கப்பா... கிடுகிடு ஏற்றம்.. தமிழகத்தில் இன்று 1438 பேருக்கு கொரோனா.. சென்னை நிலை படு மோசம்
சென்னை: தமிழகத்தில் இதுவரை இல்லாத அதிகபட்சமாக, ஒரே நாளில் 1,438 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் புதிதாக 1,116 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று மாலை நிருபர்களுக்கு பேட்டியளித்தார் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். அப்போது அவர் கூறியதாவது:
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 1,438 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 27,256ல் இருந்து 28,694 ஆக உயர்ந்துள்ளது.

12 பேர் பலி
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 861 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 12 பேர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில், கொரோனா காரணமாக, மொத்த பலி எண்ணிக்கை 232 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 15,762 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

சென்னை நிலவரம்
சென்னையில் 19,000ஐ கடந்துள்ளது கொரோனா பாதிப்பு. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் புதிதாக 1,116 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 18,693ல் இருந்து 19,809ஆக உயர்ந்துள்ளது.

டிஸ்சார்ஜ்
தமிழகத்தில் 6வது முறையாக இரட்டை இலக்கத்தில், கொரோனா பலி எண்ணிக்கை பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் இன்று 6ஆவது நாளாக ஒரே நாளில் பாதிப்பு 1,000ஐ தாண்டியுள்ளது. இன்று ஒரே நாளில் 861 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

சுகாதாரம் முக்கியம்
கை சுகாதாரம், மேற்பரப்பு சுகாதாரம் ஆகியவற்றை மக்கள் கடைபிடிக்க வேண்டும். மக்கள் ஒத்துழைப்பால்தான் இந்த பிரச்சினையை வெல்ல முடியும். வயது முதிர்ந்தவர்கள் செய்ய வேண்டியது என்ன, செய்ய கூடாதது என்ன என்பது குறித்தெல்லாம் நாங்கள் அறிவிக்கிறோம். மக்கள் அதை பின்பற்ற வேண்டும். இவ்வாறு விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications