தமிழகத்தில் இன்று.. இதுவரை இல்லாத அளவு உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு.. கூடவே ஒரு நல்ல செய்தி இருக்கு
சென்னை: தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக மேலும் 2865 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 8வது நாளாக 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது, தினசரி பாதிப்பு எண்ணிக்கை.
சென்னையில் இன்று ஒரே நாளில் 1654 பேருக்கு கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. இதுதொடர்பாக இன்று மாலை சுகாதாரத்துறை வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறியிருப்பதை பாருங்கள்:
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில், இன்று 2865 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

மொத்த பாதிப்பு
தமிழகத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 67,468. இன்று 29,655 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மொத்தம் 9 லட்சத்து 30 ஆயிரத்து 367 பேருக்கு இதுவரை பரிசோதனைகள் நடந்துள்ளன.

உயிரிழப்பு
இன்று, கொரோனாவால் 33 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 866 என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் 2424 என்ற அளவுக்கு உள்ளனர்.

டிஸ்சார்ஜ் நல்ல சேதி
பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது, கெட்ட செய்தி என்றபோதிலும், இதுவரை இல்லாத அளவுக்கு, ஒரே நாளில் 2424 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இது நல்ல செய்தியாகும். முழுமையாக குணமடைந்துதான் இவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

பரிசோதனைகள் அதிகரிப்பு
இன்று, 33 பேர் உயிரிழந்த நிலையில், அதில் 8 பேர் தனியார் மருத்துவமனையிலும், 25 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர். இன்று பரிசோதனை செய்யப்பட்ட சாம்பிள்கள் எண்ணிக்கை 29,655 ஆகும். பரிசோதனை எண்ணிக்கை 2 நாட்களுக்கு பிறகு, மீண்டும் அதிகரித்துள்ளது, முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
-
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications