தமிழகத்தில் இன்று 4,410 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; 49 பேர் உயிரிழப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 4,410 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மேலும் 5,055 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். கொரோனாவால் இன்று மட்டும் 49 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் 4-வது இடத்தில் தமிழகம் இருக்கிறது. தமிழகத்தில் இன்று 4,410 பேருக்கு கொரோனா உறுதியானது. கடந்த ஒன்றரை மாதங்களில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 5,000க்கும் கீழே 4-வது நாளாக தொடர்கிறது,

6.74 லட்சம் பேருக்கு பாதிப்பு
இதனால் தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,74,802 ஆக அதிகரித்திருக்கிறது. கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 49 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 10,472 ஆகவும் அதிகரித்திருக்கிறது.

5,055 பேர் டிஸ்சார்ஜ்
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற 5,055 பேர் இன்று மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தமிழகத்தில் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் மொத்த எண்ணிக்கை 6,22,458.

42,566 ஆக்டிவ் கேஸ்கள்
தமிழகத்தில் மொத்தம் 42,566 பேர்தான் கொரோனாவுக்கு தற்போது சிகிச்சை (ஆக்டிவ் கேஸ்கள்) பெற்று வருகின்றனர். மாவட்டங்களில் சென்னையில் இன்று 1148 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

மாவட்டங்களில்..
கோவையில் 395 பேருக்கும் சேலத்தில் 263 பேருக்கும் கொரோனா உறுதியானது. மாவட்டங்களில் சென்னையில் அதிகபட்சமாக 18 பேர் இன்று கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கோவையில் கொரோனா மொத்த மரணங்கள் எண்ணிக்கை 500ஐயும் மதுரையில் 400ஐயும் தாண்டியுள்ளது.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications