தமிழகத்தில் நீடிக்கும் கொரோனா தொற்று- ஒரே நாளில் 5,489 பேருக்கு பாதிப்பு; 66 பேர் பலி
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து நீடித்து வருகிறது. இன்று ஒரே நாளில் 5,489 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மேலும் கொரோனாவால் 66 பேர் இன்று மட்டும் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 65,53,027. கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 55,09,615. இந்தியாவில் கொரோனாவால் பலியானோர் மொத்த எண்ணிக்கை 1,01,841.

தமிழகம் 4-வது இடம்
இந்தியாவில் மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களைத் தொடர்ந்து கொரோனா பாதிப்பில் 4-வது இடத்தில் தமிழகம் இருக்கிறது. தமிழகத்தில் இன்று ஒரேநாளில் மொத்தம் 5,489 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

டிஸ்சார்ஜ் அதிகரிப்பு
இதனையடுத்து தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,19,996 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 5,558 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 5,64,092 ஆகும்.

ஒரே நாளில் 66 பேர் மரணம்
கொரோனவால் இன்று ஒரேநாளில் மொத்தம் 66 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிகை 9,784 ஆக உயர்ந்துள்ளது. இந்திய அளவில் கொரோனா மரணங்களில் தமிழகம் 2-வது இடத்தில் இருந்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கையில் தமிழகம் 3-வது இடத்தில் இருக்கிறது.

சென்னை பாதிப்பு நிலவரம்
தமிழகத்தில் சென்னையில் இன்று மட்டும் 1348 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. பிற மாவட்டங்களைப் பொறுத்தவரையில் கோவையில் அதிகபட்சமாக 474; செங்கல்பட்டில் 381; சேலத்தில் 357; தஞ்சாவூரில் 242 பேருக்கு கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா மரணங்கள்
சென்னையில் 12 பேர் இன்று கொரோனாவால் உயிரிழந்தனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மட்டும் 6 பேர் கொரோனாவால் மரணமடைந்திருக்கின்றனர். சென்னையில் இன்று ஒரேநாளில் 1374 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். சேலத்தில் அதிகபட்சமாக 306 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications