படுபயங்கரமான தோல்வியை சந்தித்த தேமுதிக.. சமக, தமாகவை விட குறைவான வாக்குகள்.. அதிர்ச்சி தரும் டேட்டா!
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் சமக, தமிழ் மாநில காங்கிரஸ், ஐயுஎம்எல் கட்சிகளை விட குறைவான வாக்குகளை பெற்று தேமுதிக கட்சி பெரிய சரிவை சந்தித்துள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாகி உள்ளன. ஒவ்வொரு கட்சியும் பெற்ற வாக்குகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளது திமுக. 159 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது.
அதிமுக கூட்டணி 75 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. இதில் திமுக மட்டும் தனியாக 125 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது. இந்த சட்டசபை தேர்தலில் ஒரு இடங்களில் கூட வெல்லாமல் தேமுதிக தோல்வி அடைந்துள்ளது.

தமிழக
இந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பாக அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்த தேமுதிக அதிக இடங்களை கேட்டு, அதிமுகவோடு சண்டைபோட்டு கூட்டணியில் இருந்து வெளியேறியது. எங்களுக்கு அதிக வாக்கு வங்கி இருக்கிறது, எங்களின் பலத்தை நிரூபிப்போம், நாங்கள் இல்லாமல் அதிமுக வெற்றிபெறாது என்று சவால்விட்டு அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறி அமமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது.

போட்டி
அமமுக கூட்டணியிலும் கூட தேமுதிக கடும் பேரத்திற்கு பின் 60 இடங்களை பெற்றது. அதிலும் 2011ல் தேமுதிக வென்ற 29 தொகுதிகளில் 12 தொகுதிகளில் தேமுதிக மீண்டும் போட்டியிட்டது. தனது சக்தியை மீறிய தேமுதிக 60 இடங்களில் களமிறங்கியது. அதன்படியே தேமுதிக போட்டியிட்ட 60 இடங்களிலும் டெபாசிட்டை இழந்துள்ளது. தேமுதிக அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத மிக மோசமான தோல்வியை அந்த கட்சி சந்தித்து இருக்கிறது.

தோல்வி
விருத்தாசலத்தில் போட்டியிட்ட பிரேமலதா தொடங்கி எல்லோரும் டெபாசிட்டை இழந்துள்ளனர். அந்த கட்சியின் மொத்த வாக்கு சதவிகிதம் வெறும் 0.43% மட்டுமே. இதுவரை குறைந்தது 1-2.5% வாக்கு சதவிகிதத்தையாவது வைத்து இருந்த தேமுதிக இந்த முறை அந்த வாக்குகளை கூட வெல்லாமல் மிக மோசமான தோல்வியை தழுவி உள்ளது.

எத்தனை வாக்குகள்
இந்த தேர்தலில் மொத்தம் 60 தொகுதிகளில் போட்டியிட்டு தேமுதிக 195610 வாக்குகளை பெற்றுள்ளது. இதைவிட குறைந்த தொகுதிகளில் போட்டியிட்ட சிறிய கட்சிகள் தேமுதிகவை விட அதிக வாக்குகள் பெற்றுள்ளன. கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி - 339342, ஐயுஎம்எல் -222263, தமிழ் மாநில காங்கிரஸ் -221051, தமிழக மக்கள் ஜனநாயக கட்சி -22156, சமத்துவ மக்கள் கட்சி -89220, இந்திய ஜனநாயக கட்சி - 39288 வாக்குகளை பெற்றுள்ளன.

மோசம்
தேமுதிக சிறிய கட்சிகளை விட மிக மோசமான வாக்குகளை பெற்று, இருந்த வாக்கு சதவிகிதமும் போய் பெரிய சரிவை சந்தித்துள்ளது. குறைந்தது அதிமுக கூட்டணியில் இருந்தாவது 2-3% வாக்குகளை பெற்று, மரியாதையான தோல்வியை சந்தித்து இருக்கும். 10-15 தொகுதிகளுக்கு ஒப்புக்கொண்டு இருந்தால் கூட தேமுதிக ஒரு இடத்திலாவது வெற்றியோ, இரண்டாம் இடமோ பெற்று இருக்கும்.

அதிமுக மோதல்
ஆனால் அதிமுகவோடு முறுக்கிக்கொண்டு வெளியேறிய தேமுதிக தற்போது தனது அரசியல் எதிர்காலத்திற்கு எதிராக தானே படுகுழியை தோண்டியுள்ளது. விஜயகாந்த் ஆக்டிவாக இல்லாத நிலையில் பிரேமலதா - சுதீஷ் - விஜயபிரபாகரன் சேர்ந்து எடுக்கும் முடிவுகள் எல்லாம் கட்சியை மொத்தமாக பாதாளத்திற்கு தள்ளி உள்ளது. இது போன்ற மோசமான தோல்வியில் இருந்து தேமுதிக மீண்டு வந்து.. மீண்டும் தனது இழந்த இடத்தை பிடிப்பது எல்லாம் கனவில் கூட சாத்தியம் இல்லை என்றே கருதப்படுகிறது!
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications