தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு.. ஒரே நாளில் 57 பேருக்கு கொரோனா கண்டுபிடிப்பு.. நெல்லைக்கு முதலிடம்
சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 57 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார்.
Recommended Video
இவர்கள் அனைவருமே டெல்லியில் நடைபெற்ற மத மாநாடு ஒன்றில் பங்கேற்று விட்டு ஒரு திரும்பியவர்கள் தான் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
சென்னையில் இன்று இரவு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். பீலா ராஜேஷ். அப்போது அவர் அளித்த தகவலை பாருங்கள்:

சுவிட்ச் ஆப்
டெல்லியில் ஒரு குழு இந்த மாதம் மத மாநாடு ஒன்று நடத்தியது. அதில் 1,500 பேர் பங்கேற்றனர். அதில் தமிழகத்துக்கு திரும்பியவர்களில் 1131 பேரில், நாங்கள் கண்டறிந்துள்ளது 523 பேர். அவர்கள் அனைவருக்கும், கையில் சீல் குத்தி, வீட்டில் ஸ்டிக்கர் ஒட்டி தனிமைப்படுத்தி உள்ளோம். அந்த மத குரூப்பில் வேறு யாராவது வந்துவிட்டு அதை அரசுக்கு தெரிவிக்காமல் இருந்தால் நீங்களே தானாக முன்வந்து அரசுக்கு தெரிவியுங்கள். ஏனெனில் நாங்கள் முயற்சி செய்து பார்த்தால், செல்போன் சுவிட்ச்ஆப் என்று வருகிறது. ஒருவேளை உங்களுக்கு அந்த பிரச்சனை இருந்தால் குடும்பத்தினருக்கும் பரவுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்பதை உணருங்கள்.

ஒரே நாளில் 57 பேர்
இது சமூக பரவலாக மாறினால் மொத்த மாநிலமும் பாதிக்கப்படும். எனவே இதுவரை கண்டறிய முடியாதவர்கள் நீங்களே வந்து ஒப்புக் கொள்ளுங்கள். உங்களுக்கு சரியான சிகிச்சை வழங்கி தனிமைப்படுத்தி கண்காணிக்க வசதியாக இருக்கும். இந்த மாநாட்டில் பங்கேற்று விட்டு திரும்பியவர்களில் 5 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதை, இன்று காலை ஏற்கனவே நாங்கள் தெரிவித்திருந்தோம். இரவு நிலவரப்படி மேலும் 45 பேருக்கு வைரஸ் பாதிப்பு உள்ளது. இதுபோக வேறு பகுதிகளுக்கு சென்றுவந்த 7 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டது. எனவே இன்று மட்டும் 57 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களில் 50 பேர் டெல்லிக்குச் சென்று திரும்பியவர்கள்தான்.

புதிய நோயாளிகள் எண்ணிக்கையில் நெல்லைக்கு முதலிடம்
மொத்தத்தில் தமிழகத்தில் 124 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லி மாநாடு சென்றவர்கள் வீடுகளை சுற்றி மொத்தம் 8 கிலோமீட்டர் தீவிர கண்காணிப்பு நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு பீலா ராஜேஷ் தெரிவித்தார். 45 புதிய நோயாளிகள் எண்ணிக்கையில், 22 பேர் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், ஒருவர் தூத்துக்குடி மாவட்டம், 4 பேர் கன்னியாகுமரி மாவட்டம், 18 பேர் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.
இவர்கள் அந்தந்த மாவட்ட மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர்.

பிப்ரவரி 15 முதல்
இதனிடையே, பிப்ரவரி 21ம் தேதி, கோவை ஈஷா யோக மையத்தில் பல ஆயிரம் பேர் பங்கேற்ற சிவராத்திரி நிகழ்ச்சி குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, பீலா ராஜேஷ் அளித்த பதிலில், அந்த நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டவில்லை. அந்த நிகழ்ச்சி நடந்து 30 நாட்களை கடந்தாகிவிட்டது. நாங்கள் பிப்ரவரி 15ம் தேதி முதலே, தமிழகத்தில் எங்கெங்கு பெரும் கூட்டங்கள் நடந்ததோ அனைத்தையும் டிராக் செய்து வைத்துள்ளோம் என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications