உழைக்கும் உதயநிதி.. நிமிரும் தமிழ்நாடு விளையாட்டுத் துறை! இன்று நடந்த சம்பவம் என்னன்னு பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளும் வீரர்களுக்கு "தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை" மூலம் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிதியுதவி வழங்கி இருக்கிறார்.

திமுக தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்ததில் இருந்தே விளையாட்டுத் துறை பல்வேறு உச்சங்களை தொட்டு வருகிறது. செஸ் ஒலிம்பியாட் தொடங்கி, ஆசிய ஹாக்கி, சர்பிங், கார் ரேஸ் என பல்வேறு விளையாட்டுத் தொடர்கள் சென்னையில் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையிலும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் அரசால் நடத்தப்படுகிறது.

Tamilnadu sports minister Udhayanidhi gave fund for sports players

குறிப்பாக தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றதில் இருந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி, விளையாட்டு வீரர்களை ஊக்குவித்து வருகிறார். இந்த நிலையில் 2023ஆம் ஆண்டு செப்டம்பர் 4ஆம் தேதி முதல் செப்டம்பர் 10ஆம் தேதி வரை லெபனான் தலைநர் பெய்ரூட்டில் நடைபெற உள்ள 5 வது ஆசிய டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டியில் சென்னையைச் சார்ந்த லோக பிரிதீப் பங்கேற்கிறார்.

அவருக்கு செலவினத் தொகையாக ரூ.1.75,000 காசோலையை உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். அதேபோல் மலேசியாவில் நடைபெற்ற பன்னாட்டு அளவிலான சிலம்பப் போட்டியில் கலந்து கொண்ட சென்னையைச் சார்ந்த தீரஜ்ஜுக்கு செலவினத் தொகையாக ரூ.1,00,000 காசோலையையும் "தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையின்" சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று முகாம் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார்.

Tamilnadu sports minister Udhayanidhi gave fund for sports players

அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் தமிழ்நாட்டில் திறமையான வீரர்களை உருவாக்கி, அவர்களை சர்வதேச அளவில் ஊக்குவிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட "தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை"க்கு லார்சன் & டூப்ரோ (Larsen & Toubro) நிறுவனத்தின் சார்பாக ரூ.1 கோடிக்கான காசோலையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் லார்சன் & டூப்ரோ நிர்வாகிகள் இன்று வழங்கினார்கள்.

இந்த நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாதரெட்டி, சங்க நிர்வாகிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+