Tamilnadu sslc result 2019: ஏப்ரல் 29ம் தேதி காலை வெளியாகிறது தமிழக 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்!
Recommended Video
சென்னை: தமிழக 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள், ஏற்கனவே அறிவித்தபடி, ஏப்ரல் 29ம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த மார்ச் மாதம், 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற்றன. மொத்தம் 9 லட்சத்து 59 ஆயிரம் மாணவ, மாணவிகள், தனித்தேர்வர்கள் இந்த தேர்வை எழுதினர்.

மொத்தம் 3,731 தேர்வுமையங்கள் இதற்காக அமைக்கப்பட்டன. சென்னையில் மட்டும் மொத்தம் 213 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, 50,678 மாணவ, மாணவிகள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளை எழுதினர்.
புதுச்சேரியில் 302 பள்ளியைச் சேர்ந்த 16,597 மாணவ, மாணவிகள் தேர்வை எழுதினர். இதனிடையே திட்டமிட்டபடி, வரும் 29ம் தேதி திங்கள்கிழமை காலை 9.30 மணிக்கு தமிழகம், புதுச்சேரிக்கான 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின்றன.
tnresults.nic.in உள்ளிட்ட வெப்சைட்டுகளில் எஸ்எஸ்எல்சி ரிசல்ட் வெளியாகிறது.












Click it and Unblock the Notifications