தமிழகத்தில் இன்று பொது போக்குவரத்துக்கு கிடையாது.. முழு ஊரடங்கில் எதற்கெல்லாம் அனுமதி இல்லை?
சென்னை: தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கையொட்டி பொது போக்குவரத்துக்கு அனுமதி கிடையாது. இதனால் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் கோயம்பேட்டில் பல பயணிகள் தவித்து வருகிறார்கள்.
தமிழகத்தில் கொரோனா பரவலை அடுத்து இரவு நேர ஊரடங்கும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கிற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு நேர ஊரடங்கின் போது அத்தியாவசிய பணிகளை தவிர இதர வாகனங்களுக்கு அனுமதி இல்லை.
தேவையின்றி வெளியே வருவோர் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை கண்காணிக்கும் பணியில் தமிழகம் முழுவதும் 60 ஆயிரம் போலீசார் ஈடுபட உள்ளனர்.

10 ஆயிரம் போலீஸார் குவிப்பு
சென்னையில் 10 ஆயிரம் போலீசார் ஈடுபடுகின்றனர். நகரில் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்புகள் அமைத்து போலீசார் வாகன சோதனையை மேற்கொள்ள உள்ளனர். மேம்பாலங்கள் அடைக்கப்பட்டு, சிக்னல்கள் நிறுத்தப்படும் என்று தெரிகிறது.

கொரோனா கட்டுப்பாடுகள்
முழு ஊரடங்கான இன்று அவசிய தேவை இல்லாமல் வாகனங்களில் ஊர் சுற்றினால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர். தமிழக அரசின் கொரோனா கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று போலீசார் சார்பில் வேண்டுகோளும் விடுக்கப்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள்
ஊரடங்கில் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள மத்திய, மாநில அரசு ஊழியர்கள், அத்தியாவசிய பணியாளர்கள், தொழிற்சாலை மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் அடையாள அட்டையை பார்வையிட்டு அனுமதிக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் எடுத்துச்செல்லும் வாகனங்களை எந்த காரணத்தை கொண்டும் தடுக்கக்கூடாது. வாகன சோதனையின்போது வாகன ஓட்டிகளிடம் கனிவாகவும், மனிதநேயத்துடனும் நடந்துகொள்ள வேண்டும் என்று போலீசாருக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு அறிவுரைகள் வழங்கி உள்ளார்.

எதற்கெல்லாம் அனுமதி ?
இந்த நிலையில் இன்று முழு ஊரடங்கில் எதற்கெல்லாம் அனுமதி மறுக்கப்படுகிறது என்பதை பார்ப்போம்.
பொது போக்குவரத்து, மெட்ரோ ரயில்கள் இயக்கப்படாது
அத்தியாவசிய பணிகளை தவிர இரு சக்கர வாகனங்களுக்கு அனுமதி இல்லை
பால், மருந்து, பத்திரிகை தவிர வேறு எந்த வாகனங்களும் இயங்க அனுமதிக்கப்படாது
காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள், ஜவுளி, நகைக் கடைகள், வணிக வளாகங்களுக்கு அனுமதி இல்லை
தியேட்டர்கள் திறக்கப்படாது, டாஸ்மாக் மதுபான கடைகளுக்கும் இன்று விடுமுறை

பொது போக்குவரத்து இல்லை
பொது போக்குவரத்து இன்றைய தினம் இயங்காது என்பதால் பல ஊர்களில் இருந்து சென்னை வந்தவர்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்கள். சென்னையிலிருந்து வெவ்வேறு பகுதிகளுக்கு செல்லவும் புறநகர பகுதிகளுக்கு செல்லவும் பேருந்துகள் இல்லை. இதனால் கோயம்பேட்டில் திரளான பயணிகள் தவித்து வருகின்றன.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications