இந்த முறையும் முதல் நாளிலேயே அசர வைத்த டாஸ்மாக்.. ரூ.163 கோடி வசூல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் 7 நாட்களுக்கு நேற்று மதுக்கடைகள் ஏழு நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்டதால் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. நேற்று ஒரு நாளில் மட்டும் 163 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனையாகி இருக்கும் என்று டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவித்தன.

Recommended Video

    TASMAC : Liquor sale hits usual high in Tamilnadu

    தமிழகத்தில் 7 நாட்களுக்கு மதுக்கடைக்ள் திறக்கப்பட்டதால் கூட்டம் அலைமோதியது. சென்னை, திருவள்ளூர் தவிர தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மதுக்கடைகள் திறக்கப்பட்டிருந்தன. அதாவது மொத்தம் உள்ள 5300 டாஸ்மாக் கடைகளில் 3600 கடைகள் திறக்ப்பட்டிருந்தன.

    காலை 7மணிக்கே குடிமகன்கள் டோக்கன் வாங்க டாஸ்மாக் கடைகளின் முன்பு நீண்ட வரிசையில் காத்திருக்க தொடங்கினர். காலை 8 மணிக்கு டோக்கன் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டது.

    மொத்தம் 500 டோக்கன்

    மொத்தம் 500 டோக்கன்

    ஒரு மணி நேரத்திற்கு 70 டோக்கன் என்ற விகிதத்தில் மொத்தம் 500 டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டன. ஒருவருக்கு ஒரு டோக்கன் மட்டுமே வழங்கப்பட்டது. ஆதார் கட்டாயமில்லை. ஒருவர் எவ்வளவு வேண்டுமானாலும் மதுவாங்கலாம் என்பதால் பலரும் மதுபானங்களை ஆர்வமுடன் வாங்கிசென்றனர். மொத்தமே ஒரு கடைக்கு 500 பேருக்கு மட்டுமே டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டதால் குடிமகன்கள் மதுவாங்க நீண்ட வரிசையில் காத்திருந்து ஏமாற்றம் அடைந்தனர்.

    சென்னை மண்டலம்

    சென்னை மண்டலம்

    நேற்று ஒரே நாளில் 163 கோடிக்கு மதுவிற்பனை நடந்ததாக டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவித்தன. 43 நாட்கள் கழித்து கடந்த 7ம் தேதி டாஸ்மாக் திறக்கப்பட்ட போது 170 கோடிக்கு மதுவிற்பனையானதாக கூறப்படுகிறது. சென்னை மண்டலத்தின் மற்ற டாஸ்மாக் கடைகளில் 4 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு மது விற்பனையானதாக கூறப்படுகிறது.

    சேலத்தில் 41 கோடி

    சேலத்தில் 41 கோடி

    அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் 44 கோடியே 70 லட்சம் ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சேலம் மண்டலத்தில் 41 கோடியே 7 லட்சம் ரூபாய்க்கும், திருச்சி மண்டலத்தில் 40 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கும், கோவை மண்டலத்தில் 33 கோடியே 5 லட்சம் ரூபாய்க்கும் மதுப்பானம் விற்பனையாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    குடிமகன்கள் வேதனை

    குடிமகன்கள் வேதனை

    இதேபோல் 7 மற்றும் 8ம் தேதிகளில் மட்டும் 295 கோடிக்கு மதுவிற்பனையானதாக தகவல்கள் வெளியாகின. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மதுபானங்கள் அதிக அளவு விற்பனையாகும் என தெரிகிறது. தமிழத்தில் பல்வேறு மதுக்கடைகளில் பாட்டில்களுக்கு 10 ரூபாய் முதல் 20 ரூபாய் கூடுதலாக விற்பனை செய்யப்பட்டதாக குடிமகன்கள் வேதனை தெரிவித்தனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+