சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்த முறையும் டாஸ்மாக்கை கைவிடாத மதுரை குடிமகன்கள்.. வசூல் சாதனை.. முழு லிஸ்ட்

Google Oneindia Tamil News

சென்னை: வழக்கம் போல் இந்த முறையும் மதுரை மண்டலத்தில் தான் அதிக அளவு மதுவிற்பனையாகி உள்ளது. மதுரை மண்டலத்தில் மட்டும் சுமார் 44 கோடி ரூபாய்க்கு வசூல் ஆகியிருப்பதாக டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவித்தன.

Recommended Video

    TASMAC : Liquor sale hits usual high in Tamilnadu

    உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்ததன் காரணமாக தமிழகத்தில் கடந்த 8ம் தேதி மூடப்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகள் மே 16ம் தேதி மீண்டும் திறக்கப்பட்டன.

    கடந்த ஒரு வாரத்திற்கு பிறகு தமிழகத்தில் டாஸ்மாக் திறக்கப்பட்ட நிலையில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை டாஸ்மாக் கடைகள் செயல்பட்டன,

    இந்த முறையும் முதல் நாளிலேயே அசர வைத்த டாஸ்மாக்.. ரூ.163 கோடி வசூல்இந்த முறையும் முதல் நாளிலேயே அசர வைத்த டாஸ்மாக்.. ரூ.163 கோடி வசூல்

    மதுவாங்க ஆர்வம்

    மதுவாங்க ஆர்வம்

    7 நாட்களுக்கு மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் கூட்டம் அளவுக்கு அதிகமாக இருந்தது. ஒவ்வாரு மதுக்கடையிலும் 500 டோக்கன் மட்டுமே விநியோகிக்கப்பட்டது. ஆனால் எவ்வளவு மது வேண்டுமானலும் வாங்கி கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் குடிமகன்கள் மிகுந்த உற்சாகத்துடன் குவிந்து இருந்தனர்.

    போலீசார் பாதுகாப்பு

    போலீசார் பாதுகாப்பு

    அதேபோல் ஆதார் கார்டும் கேட்கப்படவில்லை. இதனால் நீண்ட வரிசையில் காத்திருந்து குடிமகன்கள் மதுபானங்களை வாங்கி சென்றனர். பல்வேறு ஊர்களில் பல கிலோமீட்டர் தூரம் வரிசையில் நின்று பொறுமை காத்து வாங்கி சென்றனர். சமூக விலகலை கடைபிடிக்க போலீசார் டாஸ்மாக் கடைகளில் பணியில் இருந்தனர்.

    சேலம் 2வது இடம்

    சேலம் 2வது இடம்

    இந்நிலையில் தமிழகத்தில் சனிக்கிழமை ஒரு நாளில் 163 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையானதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நேற்று அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் 44 கோடியே 70 லட்சம் ரூபாய்க்கு மது விற்பனையாகியுள்ளதாம். சேலம் மண்டலத்தில் 41 கோடியே 7 லட்சம் ரூபாய்க்கும், திருச்சி மண்டலத்தில் 40 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கும், கோவை மண்டலத்தில் 33 கோடியே 5 லட்சம் ரூபாய்க்கும் மதுப்பானம் விற்பனையாகி உள்ளதாக கூறப்படுகிறது. சென்னை மண்டலத்தின் மற்ற டாஸ்மாக் கடைகளில் 4 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு மது விற்பனையானதாக கூறப்படுகிறது.

    மதுரைதான் டாப்

    மதுரைதான் டாப்

    கடந்த 7 மற்றும் 8ம் தேதிகளில் மட்டும் 295 கோடிக்கு மதுவிற்பனையானதாக தகவல்கள் வெளியாகின. அதிகபட்சமாக மதுரையில் 7ம் தேதி ரூ. 45.67 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டது. சென்னைக்கு வெளியில் புறநகர் பகுதியில் ரூ.42 கோடிக்கு மது விற்பனை இருந்தது. திருச்சி மண்டலத்தில் ரூ.32 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டு இருந்தது. சேலம் மண்டலத்தில் ரூ.41 கோடிக்கும் கோவை மண்டலத்தில் ரூ. 34 கோடியும் மது விற்பனை செய்யப்பட்டு இருந்தது.

    English summary
    Tamilnadu tasmac shop collection in one day rs 163 core on may 16. madurai top list
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X