தமிழ்நாட்டில் சிறார்களுக்கு எங்கே, எப்படி வேக்சின் போடப்படும்? இன்று முதல் விநியோகம்.. முழு விபரம்!
சென்னை: தமிழ்நாட்டில் நாளை முதல் 15-18 வயது சிறார்களுக்கான வேக்சின் போடப்பட உள்ளது. இதற்கான தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
Recommended Video
இந்தியாவில் 15-18 வயது சிறார்களுக்கான வேக்சின் இன்று முதல் போடப்பட உள்ளது. இதற்கான முன்பதிவு தொடங்கியது. வேக்சின் பெற தகுதி உள்ள சிறார்கள் Cowin தளத்தில் முன் பதிவு செய்யலாம் என்று அதன் தலைவர் டாக்டர் ஆர்எஸ் சர்மா தகவல் தெரிவித்துள்ளார்.
நாளை தேசிய அளவில் பல இடங்களில் இதற்காக சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட உள்ளன. ஓமிக்ரான் பரவலுக்கு இடையே சிறார்களுக்கு வேக்சின் செலுத்துவது முக்கியமான தேவையாக பார்க்கப்படுகிறது.

சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்
சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இந்த நிலையில் தேசிய அளவில் சிறார்களுக்கு வேக்சின் போடப்படும் அதே நாளில் தமிழ்நாட்டிலும் வேக்சின் போடப்படும். இதற்கான பணிகள் நடந்து வருகின்றன என்று முன்பே சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்து இருந்தார். அதன்படியே இன்று தமிழ்நாட்டில் சிறார்களுக்கு வேக்சின் போடும் பணிகள் தொடங்குகின்றன.

தமிழ்நாடு வேக்சின்
இது தொடர்பாக தமிழ்நாடு சுகாதாரத்துறை அளித்துள்ள விளக்கத்தின்படி, தமிழ்நாட்டில் சிறார்களுக்கு வேக்சின் நாளை காலை முதல் போடப்படும். இதற்காக நேரடியாக வந்து ஆன் சைட்டில் பதிவு செய்து வேக்சின் போடலாம். அல்லது கோவின் செயலியில் அருகில் இருக்கும் வேக்சின் முகாமை கண்டறிந்து அதில் முன் பதிவு செய்தும் கூட வேக்சின் போட்டுக்கொள்ள முடியும்.

தமிழ்நாடு சிறார் வேக்சின்
தமிழ்நாட்டில் சிறார்களுக்கு வேக்சின் போடுவதற்கான பணிகள் மிக தீவிரமாக நடந்து கொண்டு இருக்கின்றன. சிறார்கள் வேக்சிங் போட்டுக்கொள்ள நீண்ட தூரம் பயணிக்க வேண்டியது இல்லை. அவர்கள் அருகில் இருக்கும் பள்ளிகளிலேயே வேக்சின் போடும்படி வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படும். இதற்காக பள்ளிகளில் முகாம்கள் அமைக்கப்படும். இதனால் அதிக அளவில் சிறார்கள் வேக்சின் போட்டுக்கொள்வார்கள்.

15-18 வயது வேக்சின்
தமிழ்நாட்டில் 33.46 லட்சம் சிறார்கள் வேக்சின் போட்டுக்கொள்ள தகுதி உடையவர்களாக உள்ளனர். சிறார்களுக்கு வேக்சின் போடுவதன் மூலம் அவர்கள் விரைவில் பள்ளிகளுக்கு திரும்ப முடியும்.முதல் கட்டமாக கோவாக்சின் போடப்படும். பின்னர் போதுமான விநியோகம் கிடைத்தபின் சைடஸ் கேடில்லா வேக்சின் போடப்படலாம் என்று சுகாதாரத்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

வேக்சின் முன்பதிவு
சிறார்கள் வேக்சின் முன் பதிவை செய்ய பின்வரும் படிகளை பின்பற்ற வேண்டும். https://www.cowin.gov.in/ தளத்தில் இதற்காக புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.இதில் சிறார்கள் தங்கள் ஆதார் உள்ளிட்ட 9 ஐடி கார்டுகளில் ஒன்றை கொடுத்து ரிஜிஸ்டர் செய்ய முடியும். போன் எண் கொடுத்து ஓடிபி மூலம் ரிஜிஸ்டர் செய்ய வேண்டும். பள்ளி ஐடி கார்டை பதிவேற்றினால் போதும். சிறார்களுக்கு என்ன வேக்சின் போடலாம் என்பதை பெற்றோரே தேர்வு செய்ய முடியும்.
-
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்?












Click it and Unblock the Notifications