Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டூரிஸ்ட் ஸ்பாட்டாகும் திருவள்ளூர்! திருத்தணியில் ஈசிஆரை விஞ்சும் ரிசார்ட்! அசத்தும் தமிழக அரசு

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருத்தணியில் சுற்றுலா துறையை மேம்படுத்த ரிசார்ட்டுகள் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அது மட்டுமில்லாமல் பூண்டி அணை அருகே சிறுவர்கள் விளையாடும் பொழுதுப்போக்கு அம்சம் நிறைந்த பார்க்கும் அமைக்கப்படுகிறது.

எந்த ஒரு நாட்டின் வளர்ச்சியிலும் சுற்றுலா துறை என்பது முக்கிய பங்களிக்கும். அந்த வகையில் இலங்கை, தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் சுற்றுலா மூலம் அந்த நாட்டு அரசுக்கு அதிக வருமானம் கிடைத்து வருகிறது.

Tamilnadu tourism is forming a park and resort at Tiruttani

இந்தியாவை பொருத்தமட்டில் கோவா மிகச் சிறப்பான சுற்றுலா தலமாகும். அது போல் ஜம்மு காஷ்மீர், இமாச்சல் பிரதேசம், உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம் உள்ளிட்டவையும் சுற்றுலாவில் சிறந்து விளங்குகின்றன.

அந்த வகையில் தமிழகத்தை எடுத்துக் கொண்டால் சென்னை, மகாபலிபுரம், தஞ்சை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி, ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி உள்ளிட்டவை எல்லாம் சுற்றுலா துறையில் சிறந்து விளங்கி மாநிலத்திற்கு வருமானத்தை ஈட்டி வருகிறது. சுற்றுலா என்பது வெளிநாட்டினருக்கானது மட்டுமில்லாமல் உள்ளூர் மக்களும் மகிழும் வகையில் இருத்தல் வேண்டும்.

அந்த வகையில் திருத்தணியில் புதிய திட்டத்திற்கு கைத்தறி துறை அமைச்சர் ஆர் காந்தி அடிக்கல் நாட்டியுள்ளார். ஆம் திருவள்ளூர் மாவட்டம் பூண்டி நீர்த் தேக்கம் அருகே சதுரங்கபேட்டையில் 3.5 ஏக்கர் பரப்பளவில் ஒரு பூங்காவையும் ஹோட்டலையும் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

இந்த பூங்காவில் சாலையோர உணவுக் கடைகள் அமைக்க ஏற்பாடு செய்யப்படும். அத்துடன் பூண்டி ஏரியில் பிடிக்கப்பட்ட மீன்களை கொண்டு உணவு கடைகளும் நடத்தப்படும். மக்கள் வார இறுதி நாட்களில் இந்த பூங்காவுக்கு வந்து விளையாடி மகிழ்ச்சி விதவிதமான உணவுகளை சாப்பிட்டுவிட்டு ரிலாக்ஸாக செல்லலாம்.

இதுகுறித்து திருவள்ளூர் ஆட்சியர் பிரபு சங்கர் கூறியிருப்பதாவது: இந்த பூங்காவில் செயற்கை நீர் வீழ்ச்சியை அமைக்க திட்டமிட்டுள்ளோம். அதில் மக்கள் நியாயமான தொகையில் விளையாடி மகிழலாம். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி முருகன் கோயில், பெரியபாளையம் பவானி அம்மன், வீரராகவ பெருமாள், புட்லூர் அங்காளம்மன் கோயில்களுக்கு வருகிறார்கள்.

அங்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரவும் இந்த பூங்கா அமைக்கப்படுகிறது. தனியார் சுற்றுலா ஏஜென்சிகளை போல் தமிழக சுற்றுலா மேம்பாட்டு கழகமும் மக்களின் கையை கடிக்காத பட்ஜெட்டில் திருப்பதிக்கு சுற்றுலா அழைத்து செல்கிறது. அந்த வழித்தடத்தில் திருத்தணியையும் இணைக்குமாறு அந்த கழக அதிகாரிகளுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

திருப்பதிக்கு செல்லும் வழியில்தான் திருத்தணி இருக்கிறது. இதனால் திருத்தணியில் தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கழகம் சார்பில் ஒரு ரிசார்ட் தொடங்கவும் சுற்றுலா துறைக்கு கடிதம் எழுதியுள்ளோம். அதற்கான நிலத்தை ஒதுக்கீடு செய்ய ஏற்பாடுகளை செய்து தருகிறோம். திருத்தணிக்கு வரும் மக்கள் இந்த ரிசார்ட்டில் தங்கி திருவள்ளூரில் உள்ள சுற்றுலா தலங்களை பார்த்துவிட்டு திருத்தணி கோயிலையும் பார்க்கலாம்.

Tamilnadu tourism is forming a park and resort at Tiruttani

இந்த ரிசார்ட் கட்டி முடிக்கப்படும் வரை தனியார் ஹோட்டல்களுடன் ஒப்பந்தம் போட்டுக் கொள்ளலாம் என திருத்தணி ஆட்சியர் தெரிவித்துள்ளார். திருவள்ளூரில் சுற்றி பார்க்க ஏராளமான இடங்கள் உள்ளன. பூண்டி ஏரி, குடியம் குகைகள், பழவேற்காடு பேக் வாட்டர், கோயில்கள் என நல்ல சுற்றுலாவை வழங்க அத்தனை திறனும் இந்த மாவட்டத்திற்கு உள்ளது. போதிய ஒத்துழைப்பு இருந்தால் இந்த மாவட்டம் நிச்சயம் வளர்ச்சி அடையும்.

மலையேறுதல், படகு சவாரி, நீர் சாசக விளையாட்டுகள், பறவைகள் சரணாலயம் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தால் சென்னை மற்றும் ஆந்திர மக்களை இது வெகுவாக கவரும். தற்போது உள்ளூர் மக்கள் பூண்டி நீர்த் தேக்கத்திற்கு சென்றோ அல்லது கோயில்களுக்கு சென்றோ தங்களது மாலை பொழுதை கழித்து வருகிறார்கள். அவர்களுக்கு மேற்கண்ட வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+