சுள்ளென்ற வெயிலுக்கு இதமாக ஜில்லென்று 5 நாட்களுக்கு பெய்யும் மழை..வானிலையின் கூல் அறிவிப்பு
தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை: தமிழ்நாட்டில் பல ஊர்களில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் வரும் 11ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 33 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வறண்ட வானிலை நிலவி வருகிறது. வெயில் சுட்டெரித்து வருகிறது. ஈரோடு நகரில் அதிகபட்சமாக 37.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அக்னி நட்சத்த்திரம் ஆரம்பிக்கும் முன்பாகவே வெயில் பட்டையை கிளப்பி வருகிறது.

கோடை வெப்பத்தில் இருந்து தப்பிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் தமிழ்நாட்டில் தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இன்று தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் 10ம் தேதி வரை தென் தமிழகம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. 11ம் தேதி தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், சென்னையில் அதிகபட்சமாக 33 டிகிரி, குறைந்தபட்சமாக 23 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவும் எனவும் கூறப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரமாக மழை அளவு பதிவாகவில்லை. மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுமில்லை.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications