சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆமா இப்ப எதுக்கு இந்த "நிஷாவ" பத்தி வெதர்மேன் பேசணும்? அப்படின்னா அதுதான் நடக்குமோ?

Google Oneindia Tamil News

Recommended Video

    TamilNaduWeather update | ஆஹா சூப்பர்.. இந்த வார இறுதியில் மழை வெளுக்க போகுதாம்..

    சென்னை: கடந்த 2008-ஆம் ஆண்டு வந்த நிஷா புயல் குறித்தும் அது ஏற்படுத்திய வெள்ளப்பெருக்கு குறித்தும் தமிழ்நாடு வெதர்மேன் நினைவு பதிவுகளை வெளியிட்டுள்ளார். அப்படியென்றால் மீண்டும் ஒரு நிஷா வருமோ?

    தமிழகத்தில் 2015-ஆம் ஆண்டுக்கு பிறகு வடகிழக்கு பருவமழை பொய்த்து போனது. இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் கோடையில் மக்கள் தண்ணீருக்காக திண்டாடி வந்தனர். ஆனால் இந்த ஆண்டு சென்னை உள்பட தமிழகத்தில் வறட்சி ஏற்பட்டது.

    இந்த நிலையில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையாவது கைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது வரை அந்த அளவுக்கு மழை பெய்யவில்லை.

    ஆஹா சூப்பர்.. இந்த வார இறுதியில் சென்னையில செம்ம மழை வெளுக்க போகுதாம்.. மற்ற ஊர்களிலும் தான்!ஆஹா சூப்பர்.. இந்த வார இறுதியில் சென்னையில செம்ம மழை வெளுக்க போகுதாம்.. மற்ற ஊர்களிலும் தான்!

    சீசன்

    சீசன்

    உருவான 3 புயல்களில் இரண்டு அரபிக் கடலிலும் ஒன்று வங்கக் கடலில் உருவானாலும் வடக்கு நோக்கியும் சென்றுவிட்டது. இதனால் வடக்கிழக்கு பருவமழை இது வரை பெய்யவே இல்லை. சென்னை உள்பட தமிழகத்தில் வெப்பசலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஆகியவற்றால் மட்டுமே மழை பெய்து வருகிறது. இன்னும் கொஞ்ச நாட்களில் சீசனே முடியும் நிலை உள்ளது.

    மழை காலம்

    மழை காலம்

    இந்த நிலையில் தனியார் வானிலை ஆய்வாளர் தமிழ்நாடு வெதர்மேன் தனது பேஸ்புக்கில் நிஷா புயல் குறித்த நினைவலைகளை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறுகையில் கடந்த 2008-இல் நிஷா புயல் குறித்த நினைவலைகள்தான் இது. மிகவும் குறுகிய காலத்தில் பொய்த்து கிடந்த பருவமழையை வெள்ளப்பெருக்காக மாற்றியது. இந்த சிறப்பான மழை காலத்துக்கும் நினைவுகூரத்தக்கது.

    நிஷா

    நிஷா

    கடந்த 2008-இல் நவம்பர் மாதம் முழுவதும் மழை இன்றி காய்ந்து கிடந்தது. பெரும் ஏமாற்றத்துடன் இந்த பருவமழை முடிய போகிறது என பெரும்பாலானோர் நினைத்தனர். அப்போதுதான் வங்கக் கடலில் நிஷா புயல் உருவானது. இதனால் சென்னையில் அந்த ஆண்டு 25-ஆம் தேதி முதல் 28ஆம் தேி வரை 4 நாட்களில் மழை பிச்சி உதறியது.

    நம்பிக்கையூட்டிய நிஷா

    நம்பிக்கையூட்டிய நிஷா

    4 நாட்களில் 500 மி.மீ. மழை பெய்ததால் சென்னையே வெள்ளக்காடானது. டெல்டா மாவட்டங்களில் வரலாற்றில் காணாத மழை பெய்தது. 4 நாட்களில் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் மட்டும் 1200 மி.மீ. மழை பெய்தது. அதிலும் ஒரு நாளில் மட்டும் 657 மி.மீ. மழை கொட்டி தீர்த்தது. அந்தளவுக்கு நம்பிக்கையிழந்த மக்களுக்கு நிஷா நம்பிக்கையூட்டியது என குறிப்பிட்டுள்ளார்.

    வெள்ளக்காடாகுமா தமிழகம்

    வெள்ளக்காடாகுமா தமிழகம்

    தற்போது பிரதீப் ஜான் நிஷா நினைவலைகளை பகிர்ந்து கொண்டதை பார்த்தால் கடந்த 2008-இல் நினைத்தபடியே இந்த வடகிழக்கு பருவமழையும் பொய்த்து போகும் நிலையில்தான் உள்ளது. மாத கடைசியில் நிஷா போன்று ஏதாவது பெரிய புயல் உருவாகி தமிழகத்தை வெள்ளக்காடாக மாற்றுமா என கேட்கிறாரோ?

    English summary
    Tamilnadu Weatherman Pratheep John in his posts Recap of Cyclone Nisha in 2008 and how dry monsoon was turned into floods within few days with stand and deliver rains. A special rain filled cyclone to be remembered for life time.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X