சென்னை மக்களே உஷார்.. 24 மணி நேரம் விடாமல் மழை கொட்டப்போகிறது: தமிழ்நாடு வெதர்மேன் முக்கிய வார்னிங்
சென்னை: கடலூர் முதல் சென்னை வரையிலான பகுதிகளில் நவம்பர் 10ம் தேதியான நாளை பிற்பகல் முதல் அல்லது நாளை இரவு முதல் 11ம் தேதி பிற்பகல் வரை இடைவிடாத மழை கொட்டி தீர்க்கும் (Non Stop) என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.
இந்த காலகட்டங்களில் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட வடக்கு மாவட்டங்கள் பலவற்றிலும் தொடர்ந்து மழை பெய்து வரக்கூடிய நிலையில் இந்த கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

பிரதீப் ஜான் எச்சரிக்கை
ஏற்கனவே ஒரே நாளில் 20 சென்டிமீட்டர் மழை பெய்ததற்கே சென்னை வெள்ளக் காடாக மாறி மிதந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில்தான் தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதீப் ஜான் சில முன்னெச்சரிக்கைகள் தொடர்பாக தகவல் வெளியிட்டு இருக்கிறார். பொதுவாகவே தனியார் வானிலை ஆய்வு மைய நிபுணரான பிரதீப் ஜான் கணிப்பது சரியாக இருக்கும். எனவே இவரது இந்த கணிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இரவில் மழை
பிரதீப் ஜான் ட்விட்டர் பதிவில் இருந்து வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் இதுதான்: சென்னையின் பல பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது, இதைவிட அதிக மழை இரவு நேரத்தில் பெய்யக்கூடும். வேதாரண்யம் மற்றும் திருவாரூர் மண்டலத்தில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இந்த பகுதிகளில் மேலும் பெரிய மழை பெய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது.

நான் ஸ்டாப் மழை
மோசமான விஷயம் என்னவென்றால், நவம்பர் 10ம் தேதி பிற்பகல் அல்லது இரவு முதல் நவம்பர் 11ம் தேதி மதியம் வரை தொடர்ந்து இடைவிடாமல் மழை பெய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. 11ம் தேதி மாலை அல்லது இரவு முதல் மழை அளவு குறையத் தொடங்கும். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், 10ம் தேதி பகல் முதல், 11ம் தேதி மாலை வரை மிகக்கடுமையான கண்காணிப்பு கடலூர் முதல் சென்னை வரையிலான பிராந்தியத்திற்கு தேவைப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Recommended Video

மக்களே உஷார்
ஏற்கனவே பெய்த மழையினால் சென்னை வெள்ளத்தில் மிதக்கும் நிலையில் நாளை மதியத்திற்கு பிறகு இடைவிடாமல் மழை தொடரும் என்று பிரதீப் ஜான் தெரிவித்து இருப்பது சென்னைவாசிகளுக்கு சற்று கலக்கத்தை கொடுக்கக்கூடிய செய்திதான். எனவே மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கியிருப்பது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது போன்றவை முக்கியம் என்பதை இந்த எச்சரிக்கை மூலமாக புரிந்து கொள்ள முடிகிறது.

முதல்வர் ஆய்வு
இதனிடையே, சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளை மூன்றாவது நாளாக ஆய்வு மேற்கொண்டு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை கொளத்தூரில் உள்ள சுப்பிரமணிய தோட்டம் பகுதியில் பொதுமக்களுக்கு உணவு வழங்கிய பின்னர் கோபாலபுரம் அரசு பள்ளியில் அமைக்கப்பட்டிருக்க கூடிய மருத்துவ முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஏற்கனவே ஸ்மார்ட் சிட்டி என்ற திட்டத்தை போட்டு, மத்திய அரசிடம் இருந்து நிதியை வாங்கி என்ன செய்தார்கள் என தெரியவில்லை என்றார்.மேலும், இந்த பணிகள் எல்லாம் முடிந்த பிறகு விசாரணை நடத்தப்படும். வேலுமணி தலைமையிலான உள்ளாட்சித்துறையில் எதுவுமே சரியாக நடைபெறவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.
-
செந்தில் பாலாஜி கைதாகிறாரா? தவெக கடிதத்திற்கு ஓகே சொன்ன ஆளுநர்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
கஜானா காலியா? விஜய் சொன்ன மேட்டர்.. அப்படி எல்லாம் ஆகாது! உடைத்து பேசிய ப.சிதம்பரம் -
பத்திரப்பதிவு செய்ய இனி சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம்! தமிழக அரசு அதிரடி! -
ரூ. 20,000 கோடி 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்திற்கு மூடுவிழாவா? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
அடித்து பெய்யப்போகும் கனமழை! கோவை டூ கன்னியாகுமரி.. 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்?












Click it and Unblock the Notifications