சென்னைக்கு மிக கனமழை வார்னிங் ஓவர்.. கேளம்பாக்கத்தில் செம மழை.. வெதர்மேன் சொன்ன குட் நியூஸ்!
சென்னை: சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் மழையானது வெளுத்து வாங்கியதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: கிழக்கு கடற்கரை சாலையில் கேளம்பாக்கம், கோவளம், முட்டுக்காடு ஆகிய பகுதிகளில் செம மழை பெய்து வருகிறது. சென்னையின் தென் பகுதியில் அடர்ந்த மேகங்கள் வரிசையாக நிற்கின்றன.
கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து தென் சென்னைக்கு மேகக் கூட்டங்கள் மெதுவாக நகர்கின்றன. இன்று காலை தென் சென்னையில் கனமழை பெய்தது.

கனமழை
மேலும் ஒரு கனமழைக்கு தென் சென்னைக்கு வாய்ப்பிருக்கிறது. அதே நேரம் விழுப்புரம், திருப்பத்தூர், சேலம், கரூர் திருவண்ணாமலை மற்றும் திருப்பூர் ஆகிய பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் மிக அதிக கனமழை அல்லது அதிக கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.

மயிலாடுதுறை
மயிலாடுதுறை அல்லது கடலூர் மாவட்டத்தை சுற்றி மேகக் கூட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. அடுத்த இரு தினங்களுக்கு காற்றில் உள்ள ஈரப்பதத்தால் மழை பெய்யும். அதிலும் அதிகாலை நேரங்களில் கனமழை பெய்யும். இன்று தென் சென்னையில் தீவிர மழை பெய்தது. வரும் 14 ஆம் தேதி வரை விட்டு விட்டு மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மீண்டும் ஒரு குறைந்த காற்றழுத்தம்
அடுத்து வரும் நவம்பர் 19 அல்லது 20 ஆம் தேதி மீண்டும் ஒரு குறைந்த காற்றழுத்தம் தமிழக கடலோரத்தில் உருவாகிறது. இன்று பல இடங்களில் வெயில் உச்சம் பெறும். அங்கும் இங்குமாக திடீர் மழை பெய்யும். இதே நிலை நாளையும் தொடரும். மேற்கு தமிழகத்தை பொருத்தமட்டில் திருப்பூர்- கரூர்- நாமக்கல் பகுதிகளில் அரிதாக கனழை பெய்யும்.

வடசென்னை
கனமழை மூலம் வடசென்னையை முறியடித்தது தென் சென்னை. அடையாறில் 78 மி.மீ. மழை பதிவாகியுள்ளது, ஆவடியில் கனமழை பெய்துள்ளது. பெரம்பலூர், விழுப்புரம், மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இரவு நேர்களில் மழை பெய்யும். இவ்வாறு தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். சீர்காழியில் கனமழை பெய்துள்ளதால் ஒரு கிராமமே அடித்துச் செல்லப்பட்டதாக நெட்டிசன்கள் கூறுகிறார்களே.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications