"இனிமே இது நம்ம காலம்".. ஜில் ஜில் ட்வீட் போட்ட பிரதீப் ஜான்.. அர்த்தம் புரிகிறதா மக்களே?
சென்னை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாத்திரம் அல்ல, கடலூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட வட தமிழகத்திலும் நல்ல மழைக்கு வாய்ப்புள்ளது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழையின் காரணமாக கேரள எல்லையில் உள்ள தமிழக மாவட்டங்களில் மழை பெய்தது. அது போல் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாகவும் தமிழகத்தில் பரவலாக மழை பெய்த வண்ணம் இருந்தது.
இதனால் ஏற்கெனவே நீர் நிலைகள் நிரம்பிவிட்டன. இந்த நிலையில் குப்பைகள் தேங்கி தண்ணீர் போக வழியில்லாத நீர் நிலைகளை தூர்வாரும் பணிகள் தமிழக அரசாலும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களாலும் தன்னார்வலர்களாலும் செய்யப்பட்டு வருகின்றன.

வடகிழக்கு பருவமழை தீவிரம்
இந்த பணிகள் வடகிழக்கு பருவமழையை கருத்தில் கொண்டு செய்யப்படுகிறது. தமிழகத்திற்கு பலனை கொடுக்கும் வடகிழக்கு பருவமழைக் காலம் அக்டோபர்- நவம்பரில் தொடங்குகிறது. இந்த ஆண்டு நேற்று முன் தினம் முதல் தென்மேற்கு பருவமழையால் பலன் பெறாத தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

கூலான சென்னை
சென்னையில் நேற்று இரவு முதல் மழை வெளுத்து வாங்கியது. அது போல் மதுரையிலும் இடியுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்குகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

தண்ணீர் தேசமான தமிழகம்
நேற்றைய தினம் தேனி மாவட்டம் வீரபாண்டி மற்றும் அம்பாசமுத்திரத்தில் கனமழை பெய்தது. இங்கு மழையின் அளவு 100 மி.மீ அளவை தாண்டியது. அது போல் தேனி மாவட்டத்தில் உள்ள கூச்சனூரில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இப்படியாக தமிழகத்தில் எங்கு திரும்பினாலும் தண்ணீர் தேசமாக இருந்து வருகிறது.
Recommended Video

இனிமே இது நம்ம காலம்
இந்த நிலையில் இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் இனிமே இது நம்ம காலம். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நல்ல மழை பெய்ய போகிறது. அத்துடன் வட தமிழகமான கடலூர், வேலூர் , திருவண்ணாமலை, ராணிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் நல்ல மழைக்கு வாய்ப்புள்ளது. அது போல் டெல்டா பகுதிகளான நாகை, திருவாரூரிலும் கனமழை வெளுத்து வாங்கவுள்ளது. தென் தமிழகமான கன்னியாகுமரியிலும் நல்ல மழைக்கு வாய்ப்புள்ளது என வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

வங்கக் கடலில் அடுத்தடுத்து..
இனிமே இது நம்ம காலம் என பிரதீப் ஜான் குறிப்பிட்டுள்ளது வடகிழக்கு பருவமழையைத்தான் என நெட்டிசன்கள் தெரிவிக்கிறார்கள். அது போல் தனியார் தொலைக்காட்சிக்கு இவர் அளித்த பேட்டியில் வடகிழக்கு பருவமழை நன்றாக இருக்கும். வங்கக் கடலில் அடுத்தடுத்து காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என தெரிவித்திருந்தார். எனவே வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதாகவே கருதப்படுகிறது












Click it and Unblock the Notifications