நவம்பர், டிசம்பரில் "இந்த" பெல்ட்டுக்கு மழை இருக்காது.. வறண்ட பெல்ட்!.. வெதர்மேனின் முக்கிய அப்டேட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை ஆகிய மாவட்டங்களில் 3ஆவது நாளாக மழை பெய்துள்ளது என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

வங்கக் கடலில் உருவான காற்றழுத்தமானது ஆழ்ந்த காற்றழுத்தமாக மாறி கடந்த 11, 12 ஆகிய தேதிகளில் தமிழகம் ,புதுவையில் மழையை கொடுத்தது. இதையடுத்து அந்த ஆழ்ந்த காற்றழுத்தம் நேற்றைய தினம் குறைந்த காற்றழுத்தமாக வலுவிழந்தது.

இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து அது அரபிக் கடலில் இன்றைய தினம் கலக்கிறது. இதன் தாக்கம் காரணமாக கடந்த இரு தினங்களாக தமிழகத்தில் மழை பெய்து வந்தது.

மழை ஓவர்

மழை ஓவர்

நேற்றுடன் மழை ஓவர் என நினைத்த நிலையில் நேற்று இரவு முதல் அதிகாலை வரை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது. சென்னையில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: 3 ஆவது நாளாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் 3ஆவது நாளாக மழை பெய்துள்ளது.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு

செங்கல்பட்டு திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் 10 செ.மீ. மழைக்கு மேல் பதிவாகியுள்ளது. நேற்று இரவு முதல் காலை வரை இந்த மழை பெய்துள்ளது. இந்த 3 நாட்களும் மழை பெய்துள்ளது. மிக அதிக கனமழை பெய்ய வில்லை என்பதை ஒப்புக் கொள்கிறேன். அதற்காக சில வானியலாளர்கள் கூறுவது போல் மேற்கண்ட மாவட்டங்களில் மழையே இல்லை என சொல்லிவிட முடியாது.

மிக கனமழை

மிக கனமழை

உத்தமேரூரில் மிக கனமழை பெய்துள்ளது. அங்கு 169 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. சென்னை விமான நிலையத்தை ஒட்டி உள்ள குன்றத்தூர் பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. செம்பரம்பாக்கத்தில் 89 மி.மீ. மழையும் பெய்துள்ளது. மதுராந்தகத்தில் 111 மி.மீ. மழையும் திருத்தணியில் 130 மி.மீ மழையம் ஊத்துக்கோட்டையில் 95 மி.மீ. மழையும் பெய்துள்ளது.

வடசென்னை

வடசென்னை

சென்னையில் வடசென்னையான கத்திவாக்கம் அருகே உள்ள எண்ணூரில் 98 மி.மீ. மழையும் மதுரவாயலில் 97 மி.மீ. மழையும் அண்ணாநகர் மேறகில் 68 மி.மீ. மழையும் பெய்துள்ளது. வட தமிழக உள் மாவட்டங்களான திருப்பத்தூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும். கிருஷ்ணகிரியில் அக்டோபரில் புயலே இல்லமல் 80- 90 மி.மீ. மழை பெய்துள்ளது. இதற்காக அவர்கள் மகிழ்ச்சி அடைய வேண்டும்.

வறண்ட கிருஷ்ணகிரி

வறண்ட கிருஷ்ணகிரி

நவம்பர் , டிசம்பரில் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு அந்த அளவுக்கு மழை இருக்காது. ஆனால் கோவையில் நல்ல மழை பெய்யும். இன்றும் நாளையும் கொங்கு மண்டலம், கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். கோவை, திருப்பூர் பகுதிகளுக்கு தொடர்ந்து இரு நாட்கள் விட்டுவிட்டு மழை பெய்யும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+