ஹாட்ஸ்பாட்டாகும் சென்னை.. நவம்பர் 11 டூ 14 இல் கொட்ட போகும் கனமழை.. ரிப்பீட்டாகும் "முதல் சாதனை"
சென்னை: சென்னையில் வரும் 11 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை மிக கனமழைக்கு வாய்ப்பிருக்கிறது. கடந்த நவம்பர் 1 முதல் 4 ஆம் தேதி வரை பெரிய மழை பெய்தது போல் இந்த முறையும் நிகழ வாய்ப்பிருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை ஆரம்பமே அசத்தலாக தொடங்கியது. சென்னையில் ஒரு மாதத்தில் பெற கூடிய சராசரி மழை அளவிலிருந்து 50 சதவீதத்தை கடந்த நவம்பர் 1, 2 ,3, 4 ஆகிய தேதிகளில் பெற்றுவிட்டதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மேற்கண்ட 4 நாட்களுக்கு கனமழை பெய்தது. இதனால் பள்ளிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக லேசான மழை பெய்து வருகிறது.

வானிலை ஆய்வு மையம்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நாளை வங்கக் கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகிறது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்தம் அப்படியே கடலில் கலந்து விடுகிறதா இல்லை புயலாக வலுப்பெறுகிறதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வரும் 11 ஆம் தேதி
வரும் 11 ஆம் தேதி முதல் தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் மழையின் நிலவரம் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியிருப்பதாவது: அடுத்த இரு தினங்களுக்கு விட்டுவிட்டு அதிக மழை பெய்யும். அதாவது குறைந்த நேரத்தில் அதிக அளவு மழை பெய்யும்.

இதெல்லாம் டிரெய்லர்
பெரும்பாலும் இரவு முதல் அதிகாலை வரை இந்த மழை பெய்யும். அதாவது நவ. 9 மற்றும் 10 தேதிகளில் பெய்யும் இந்த கனமழையானது சும்மா டிரெய்லர்கள்தான். ஆனால் வரும் 11 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பிருக்கிறது. சென்னை உள்பட வடதமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும். இவையெல்லாம் மழைக்கான ஹாட்ஸ்பாட்டாக அமையும்.

ரிப்பீட்டு
இந்த மழை சாதா மழை அல்ல, கடந்த நவம்பர் 1 முதல் 4 ஆம் தேதி வரை சென்னையில் பெய்தது போல் இருக்கும் என பிரதீப் ஜான்தன்னுடைய பதிவில் தெரிவித்துள்ளார். இந்த முறை அதிக புயல் சின்னங்கள் உருவாகும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். எனவே இந்த ஆண்டு மழையானது பெரு மழையாகும் என்பதில் சந்தேகமே வேண்டாம் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications