ஜனவரியில் அரிதாக மழை.. காரணம் என்ன?.. 4 நாட்கள் 22 மி.மீ. மழை.. தமிழ்நாடு வெதர்மேன் போஸ்ட்!
சென்னை: தமிழகத்தில் இன்றும் நாளையும் பரவலாக நல்ல மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இன்று காலை முதல் சென்னையில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது பேஸ்புக் பதிவில் கூறுகையில் இந்தோ பசிபிக் பகுதியிலிருந்து காற்று வீசுவதால் பருவக்காற்று ஜனவரியிலும் தொடர்ந்து வீசுவதாக 2021 மிகவும் அரிதான ஆண்டு என்றே சொல்லலாம்.

வட அரைக் கோளம்
தென் அரைக் கோளத்தின் பக்கம் எம்ஜேஓ சுழற்சி இருப்பதால் வட அரைக் கோளத்தில் எளிதாக மழை பெய்கிறது. ஜனவரி மாதமான தற்போது நாம் தமிழகத்தில் 22 மி.மீ. மழையை பெற்றுள்ளோம். அப்படியென்றால் ஜனவரி மாதத்தில் வழக்கமாக பெய்யும் 18 மிமீ மழை அளவை விட அதிகமாக வெறும் 4 நாட்களில் பெற்றுள்ளோம்.

மிதமான மழை
இனி பெய்யும் மழையெல்லாம் தமிழகத்திற்கு போனஸாகத்தான் இருக்கும். இந்த மழை இன்றும் நாளையோடு மட்டும் நின்றுவிடாது. இன்னும் தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அதில் ஜனவரி 5, 6 நல்ல மழையை கொடுக்கும். அடுத்த சில நாட்களில் தமிழகம், கேரளாவில் நல்ல மழை பொழிவு இருக்கும். அவை பெரும்பாலும் மிதமான மழையாகவே இருக்கும்.

மலை பகுதிகள்
தமிழகத்தில் வட கடலோர மாவட்டங்கள், வட உள் மாவட்டங்களில் டெல்டா வரை மழை பெய்யும். மேற்கு காற்று வட இந்தியாவை நோக்கி வருகிறது. இதனால் கேரளா மற்றும் தமிழகத்தின் உள் மாவட்டங்களான கொங்கு பகுதி, கர்நாடகா மலை பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும்.

வட உள்மாவட்டங்கள்
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் முதல் டெல்டா கடலோர மாவட்டங்கள், வட உள்மாவட்டங்களில் அடுத்த இரு தினங்களுக்கு நல்ல மழை பெய்யும். டெல்டா விவசாயிகளுக்கு இது காலம் கடந்த மழையாகும். அடுத்த இரு தினங்களுக்கு குடையுடன் வெளியே செல்லுங்கள். இந்த மழை 6 ஆம் தேதிக்கு மேலும் தொடர்ந்து 8 அல்லது 9 தேதிகளில் அதிகமாக இருக்கும்.

சாதனை
ஜனவரி மாதத்தில் 2017-ஆம் ஆண்டு 37.3 மி.மீ மழை பெய்துள்ளது. 2000 ஆம் ஆண்டில் 30.3, 1990- இல் 86.5, 1986- இல் 65.3 , 1985- இல் 89.6, 1984-இல் 34.5 மி.மீ. மழை பெய்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரி தொடங்கி 4 நாட்களில் 22 மி.மீ. மழை பெய்துள்ளது. 1921 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 141 மி.மீ. பெய்த மழையே பெரும் சாதனையாக இருந்தது. 4 நாட்கள்தானே ஆகிறது. இந்த மாதம் முடியும் வரை பொறுத்திருந்து பார்ப்போம் என பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
-
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications