சென்னையில் நவ.21, 22 தேதிகளில் மிக கனமழை பெய்யும்! 2 நாட்கள் ஸ்கூலுக்கு லீவு கிடைக்கும்?.. வெதர்மேன்
சென்னை: சென்னை உள்பட வடதமிழகத்தில் நாளை (திங்கள்கிழமை), நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: அடர்த்தியான மேற்கத்திய மேகங்களள் திங்கள்கிழமை அதிகாலை சென்னை கடலோரத்தில் நிலவும்.
இதனால் வடதமிழகத்தில் திங்கள்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் கனமழை பெய்யும். இதன் பிறகு குறைந்த காற்றழுத்தமானது வலுவிழக்க தொடங்கும். இதனால் தமிழகத்தின் சில பகுதிகளில் விட்டுவிட்டு பரவலாக மழை பெய்யும்.

அதிகாலை
இன்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு அல்லது அதிகாலையில் மழை பெய்ய தொடங்கும். கொஞ்சம் முன்ன பின்ன இருக்கும். சரியாக மழை எப்போது பெய்யும் என சரியாக சொல்வது சற்று கடினமானது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், புதுச்சேரி மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் நாளை மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதி கனமழை பெய்யும்
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் திங்கள்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை அதி கனமழை பெய்யும். நாளை நாள் முழுவதும் காற்றானது மணிக்கு 30- 40 கி.மீ. வேகத்தில் வீசும். தெற்கு ஆந்திராவிலிருந்து வடதமிழக கடலோர பகுதிகள் வரையிலான கடற்பகுதியில் இன்று, நாளை, நாளை மறுநாள் மீனவர்கள் செல்வது கடினமாக இருக்கும். எனவே இந்திய வானிலை மையம் மற்றும் சென்னை வானிலை மையத்தின் அறிவுரையை பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறார்கள்.

குழந்தைகள் எதிர்பார்ப்பு
திங்கள்கிழமையும் செவ்வாய்க்கிழமையும் குழந்தைகள் எதிர்பார்த்தபடி பள்ளிகளுக்கு விடுமுறை கிடைக்கும். ஒரு வேளை அன்றைய தினம் தேர்வு இருந்தால் தயவு செய்து படித்து வைத்துக் கொள்ளுங்கள். இயற்கையை நம்பி படிக்காமல் இருந்து விடாதீர்கள். இயற்கையில் எந்த வித மாற்றமும் நடக்கலாம். இவ்வாறு தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

வெதர்மேன் போட்ட ட்வீட்
நேற்றைய தினம் வெதர்மேன் போட்ட ட்வீட்டில் ஞாயிற்றுக்கிழமை மழையில்லை என்பதால் திங்கள்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை கிடைக்காது என்பதால் பள்ளி மாணவர்கள் ஏமாற்றமடைந்துள்ளார்கள். எனினும் நம்பிக்கையை இழக்க வேண்டாம். செவ்வாய்க்கிழமை முதல் வியாழக்கிழமை வரை குறைந்தது ஒரு நாளாவது லீவு கிடைக்கும். ஆனால் லீவு வரலைன்னா என்ன கேக்க கூடாது என்றும் பிரதீப் ஜான் தெரிவித்திருந்தார்.
-
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications