சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஏப்ரல் மாதத்தில்.. அதுவும் சென்னையில்.. இப்படியா?.. வாவ் செமங்க!.. வெதர்மேன் ஹேப்பி அண்ணாச்சி!

Google Oneindia Tamil News

சென்னை: ஏப்ரல் மாதத்தில் அதுவும் சென்னையில் இத்தனை மில்லிமீட்டர் மழையா? மழை பொழிவை ட்விட்டரில் பதிவு செய்த தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் ஆச்சரியமடைந்தார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த ஆண்டு பொய்க்காமல் பெய்தது. தமிழகத்தில் நிவர், புரேவி ஆகிய புயல்களால் நல்ல மழை பொழிவை கொடுத்தது.

இதனால் நீர் நிலைகள் நிரம்பி கோடையில் தண்ணீர் பஞ்சம் இல்லாத நிலை உள்ளது. எப்போதும் இல்லாத திருநாளாம் என்பதை போல் கடந்த பிப்ரவரி மாதத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் மழை பெய்தது.

ஏப்ரல் மாதம்

ஏப்ரல் மாதம்

அது போல் மார்கழி மாதம் போய் தை, மாசி மாதம் வரை பனியும் இருந்தது. அது போல் இந்த 2021 ஆம் ஆண்டு வித்தியாசமான நிகழ்வுகள் நடந்தன. அந்த வகையில் கோடையில் அதுவும் ஏப்ரல் மாதத்தில் நேற்றைய தினம் சென்னையில் மழை பெய்தது.

பரவலாக

பரவலாக

வழக்கமாக தென் தமிழகம், உள்மாவட்டங்களில் கோடை காலத்தில் மழை பெய்யும். ஆனால் சென்னையில் என்பது மிகவும் அரிது. அதை முறியடிக்கும் வகையில் நேற்றைய தினம் சென்னையில் பல்வேறு இடங்களில் பரவலாக கனமழை பெய்தது.

மழை

மழை

இதனால் கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் சென்னையில் அதுவும் ஏப்ரல் மாதத்தில் இதுபோன்ற ஒரு மழையை பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது.

எத்தனை மி.மீ.

எத்தனை மி.மீ.

அதிலும் சென்னை கடலோர பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்துள்ளது. சென்னையில் எந்தெந்த இடங்களில் எத்தனை மி.மீ. மழை பெய்துள்ளது என்பதை பார்ப்போம்.

  • ஆலந்தூர் 25 (மி.மீ.ல்)
  • மீனம்பாக்கம்- 24
  • மாதவரம்- 22
  • எண்ணூர் 19
  • கோடம்பாக்கம்- 16
  • வளசரவாக்கம்- 16
  • நுங்கம்பாக்கம்- 14
  • மணலி- 10

English summary
Tamilnadu Weatherman tweets about rain readings of Chennai with massive thunderstroms.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X