அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் இடியுடன் கூடிய மிக கனமழை.. எங்கெல்லாம் பெய்யும்? வானிலை மைய அறிக்கை
சென்னை: இன்றில் இருந்து அடுத்த ஐந்து நாட்களுக்கு தமிழ்நாட்டில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னையில் மணிக்கு 30 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும். பகல் நேரத்தில் காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வரும் நிலையில் அடுத்த ஐந்து நாட்களுக்கு எங்கெல்லாம் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்த தாழ்வு மண்டலம் நாளை கடலூர் அருகே மாலையில் கரையை கடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

முதல் நாள்
நாள் 1 (10.11.2021) - கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், சேலம், திருவண்ணாமலையில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
Recommended Video

இரண்டாம் நாள்
நாள் 2 (11.11.2021) - தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கோவை, ஈரோடு மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, சேலம், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மூன்றாம் நாள்
நாள் 3 (12.11.2021) - நீலகிரி, கோவை, செங்கல்பட்டு, நாமக்கல், திருச்சிராப்பள்ளி, சென்னை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கோவை, சேலம், வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் சில இடங்களில் மட்டும் கனமழை பெய்யும்.

நான்காம் நாள்
நாள் 4 (13.11.2021): தமிழகத்தின் கிருஷ்ணகிரி, ஈரோடு, நீலகிரி, கோவை மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தின் மற்ற இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஐந்தாம் நாள்
நாள் 5 (14.11.2021): நீலகிரியில், கோவை, சேலம், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு. மற்ற மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.












Click it and Unblock the Notifications