கத்திரி வெயிலை குளிர்விக்க வரும் மழை.. தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கொட்டித் தீர்க்க போகும் மழை
சென்னை: வெப்ப சலனம் காரணமாக அடுத்த ஐந்து நாட்களுக்கு மேற்குத் தொடர்ச்சி மலையை ஓட்டிய மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இந்த ஆண்டு கோடைக் காலம் தொடங்குவதற்கு முன்னரே மாநிலம் முழுவதும் வெப்பம் கடுமையாக இருந்தது. மாநிலத்தின் பல பகுதிகளிலும் கோடை வெயில் சதமடித்தது.
இந்த நிலையில், கடந்த மே 4ஆம் தேதி தான், தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயில் காலம் தொடங்கியது. வரும் மே 29ஆம் தேதி வரை அதாவது 25 நாட்கள் இருக்கும் இந்த அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் இருக்கும்.

ஐந்து நாட்களுக்கு மழை
இந்தக் காலகட்டத்தில் வெயில் மிக அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், வெப்பச்சலனம்காரணமாகத் தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மழை பொய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அடுத்த ஐந்து நாட்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலையை ஓட்டிய மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை
அதேபோல சென்னையை பொறுத்தலவைர வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை
மேலும், கர்நாடகா மற்றும் கேரளா கடலோர பகுதிகளிலும் லட்சத்தீவு பகுதிகளிலும் சூறாவளிக் காற்று 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்வதைத் தவிர்க்குமாறும் சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.

வெப்பநிலை
வரும் மே 11 முதல் 13ஆம் தேதி வரை தரைக்காற்று வீச வாய்ப்புள்ளதால் தமிழக கடலோர மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களில் தற்போது இருக்கும் வெப்பநிலையைவிட 2 முதல் 3 டிகிரி செல்சிஸ் வரை வெப்ப நிலை உயரக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications