வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழகத்தில் இனி கனமழை.. வானிலை மையம் எச்சரிக்கை!
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது.
Recommended Video
சென்னை: வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதனால் தமிழகத்தில் நாளையில் இருந்து கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாடு முழுக்க பல மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கேரளா, கர்நாடகா, குஜராத், மஹாராஷ்டிரா, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் கடுமையாக மழை பெய்து வருகிறது. அதேபோல் தமிழகத்திலும் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் நீலகிரி, சேலம், கோவை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கடுமையாக மழை பெய்து வருகிறது. ஆனால் இந்த மழை காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பெய்யவில்லை. வடமாநிலங்களில் பெய்யும் மழை காரணமாக, தமிழகத்தை விட்டு காற்று வெளியேறியது.

என்ன மேகம்
இதனால் உருவாகும் மேகங்கள் மழையை ஏற்படுத்துகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. முன்னிற்கு வானிலை மைய இயக்குனர் ரமணனும் இதை உறுதிப்படுத்தி இருந்தார். இந்த நிலையில் தற்போது நேரடியாக வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.

அடுத்து என்ன
அடுத்த 48 மணி நேரத்தில் இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என்று வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் நாளையில் இருந்து கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வட மேற்கு திசையில் நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேரளா வாய்ப்பு
சட்டீஸ்கர் வழியாக நகர்ந்தால் கேரளாவில் அதீத கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. கேரளாவில் மழை பெய்தால் அங்கு பெரிய அளவில் வெள்ளம் ஏற்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் கேரளாவில் 7 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகம் எப்படி
அதே சமயம் தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கின்ற மாவட்டங்களில் இதனால் அதிகமாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. டெல்டா மாவட்டங்களிலும் நாளை காலையில் இருந்து மழை பெய்யலாம் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications