தென்மேற்கு பருவக்காற்று வருகிறது.. தமிழகத்தில் இன்றும் செம மழை இருக்கும்.. எங்கெல்லாம் பெய்யும்?
சென்னை: தமிழகத்தில் இருக்கும் 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video
மழை காலம் தொடங்கிய நிலையில் கேரளா, கர்நாடகா, மஹாராஷ்டிரா, மேற்கு வங்கத்தில் கனமழை பெய்து வருகிறது. அதிலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் காவிரியில் நீர் வரத்து அதிகம் ஆகியுள்ளது.
தமிழகத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. தென்மேற்கு பருவக்காற்று மிக தீவிரமாக வீச தொடங்கி உள்ளது. இதனால் தமிழகத்தில் மழை மேகங்கள் சூழ்ந்துள்ளது.

தமிழகம் நிலை
இந்த நிலையில் தமிழகத்தில் இன்றும் தீவிரமான மழை பெய்யும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. தமிழகத்தில் இருக்கும் 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகமாக டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும். தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் .

காரணம் என்ன
தென்மேற்கு பருவக்காற்று மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக இந்த மழை பெய்யும். தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மழை அருகே இருக்கும் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் இதனால் நன்றாக மழை பெய்யும். மேலும் தர்மபுரி, சேலம், நாமக்கல் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கோவையில் சாரல் மழை பெய்யும்.

கடல் எப்படி
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும். காற்று வேகமாக வீசும். அதிகமாக 50 கிமீ வேகத்தில் கூட காற்று வீச வாய்ப்புள்ளது. இதனால் மீனவர்கள் அந்த பகுதியில் மட்டும் மீன் பிடிக்க வேண்டாம். வேறு இடங்களில் மீனவர்கள் கவனமாக மீன் பிடிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சென்னை எப்படி
சென்னையில் இரவு முழுக்க பல இடங்களில் கனமழை பெய்தது. இதனால் சென்னையின் வானிலை திடீர் என்று குளிச்சியாக மாறியுள்ளது.சென்னையின் முக்கிய பகுதிகளில் அதிகாலை வரை கனமழை பெய்தது. சென்னையில் இன்றும் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடுமையான தென்மேற்கு பருவ காற்று மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையிலும் மழை பெய்யும் என்கிறார்கள்.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications