அப்பப்பா.. கோழியை வெயிலில் காண்பித்தால் தந்தூரிதான்.. தகிக்கும் ஆம்பூர்.. அரக்கோணத்தில் உச்சபட்சம்
சென்னை: தமிழகத்தில் நிறைய இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளது. இந்த வெப்பநிலை அதிகரிப்பால் மக்கள் வீட்டுக்குள்ளேயே புழுக்கத்தில் அவதிப்பட்டனர்.
தமிழகத்தில் கடந்த மே 4 ஆம் தேதி முதல் அக்னி நட்சத்திரம் தொடங்கியது. இது வரும் 28 வரை இருக்கும். இந்த காலகட்டங்களில் பெரும்பாலான இடங்களில் வெயில் கொடுமை கொரோனாவை விட மோசமாக இருக்கும்.
இந்த காலகட்டங்களில் வழக்கமாக இளநீர் கடைகள், தர்ப்பூசணி கடைகள், பழச்சாறு கடைகள், ஐஸ்கிரீம் பார்லர்களில் கூட்டம் அதிகமாக காணப்படும். மேலும் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அந்தந்த மாவட்ட நிர்வாகத்தினர் அறிவுறுத்துவர்.

கடைகள் இல்லை
இந்த நிலையில் தற்போது கொரோனா பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் பெரும்பாலானோர் வீடுகளை விட்டு வெளியே வராமல் உள்ளனர். அது போல் மேற்கண்ட ஜூஸ் கடைகள், ஐஸ்கிரீம் கடைகளும் திறக்கப்படவில்லை. சாலையோரக் கடைகளும் தென்படவில்லை.

பணம் இல்லை
ஊரடங்கில் ஓரளவு தளர்வுகள் கொடுத்தாலும் பெரும்பாலானோர் வொர்க் பிரம் ஹோம் முறையில் பணியாற்றி வருகிறார்கள். வெகு சிலரே வெளியே செல்கின்றனர். அவர்களுக்கு ஊதியம் என்பது கொடுக்கப்படாமல் உள்ளதால் ஜூஸ் கடைகளை தேடி செல்லவும் முடியவில்லை. மேலும் ஜூஸ் கடைக்காரர்களுக்கும் சரக்குகளை வாங்க போதிய பணம் இல்லை.

அரக்கோணம்
இவை என்னதான் இருந்தாலும் கத்திரி வெயில் ஏற்படுவது கொரோனாவால் மாற்ற முடியாது. தற்போது தமிழகத்தில் முக்கிய இடங்களில் வெயிலின் தாக்கம் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியுள்ளது. தற்போது சென்னையில் 95 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. அது போல் கடலூரில் 100.4 டிகிரி பாரன்ஹீட்டும், ஆம்பூரில் 104 டிகிரியும் அரக்கோணத்தில் 107 டிகிரி பாரன்ஹீட்டும் பதிவாகியுள்ளது.
Recommended Video

நெல்லை
ஈரோடு, குடியாத்தம், சேலம் ஆகிய இடங்களில் 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. நெல்லை, திருச்சியில் 102 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் உள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் வெப்பம் சதம் அடித்துள்ளது. இதனால் வீடுகளில் ஏசி பயன்பாடு அதிகரித்துள்ளது. கொரோனாவால் மாலை நேரத்தில் இயற்கை காற்று வாங்குவோரும் வெளியே வராத நிலை ஏற்பட்டுள்ளது.
-
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு












Click it and Unblock the Notifications