"மிஸ்டர் யுனிவர்ஸ்.." உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த தமிழர்.. ஆணழகன் போட்டியில் கெத்து
சென்னை: உலக ஆணழகன் போட்டியில் கலந்து கொண்ட தமிழக வீரர் (மிஸ்டர் யுனிவர்ஸ் பட்டத்தை வாங்கி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.
பெண்களுக்கு எப்படி அழகி போட்டிகள் நடத்தப்படுகிறதோ.. அதேபோல ஆண்களுக்கு ஆணழகன் போட்டி நடத்தப்படும்.. ஆணழகன் போட்டியில் இளைஞர்களின் கட்டுமஸ்தான உடலை வைத்து மதிப்பிடப்படும்.

ஆணழகன் போட்டியில் கலந்து கொள்ள ஒருவர் பல வருடப் பயிற்சியும் மேற்கொள்ள வேண்டி இருக்கும். நீண்ட பயிற்சிக்குப் பின்னரே ஆணழகன் போட்டியில் எந்தவொரு நபராலும் கலந்து கொண்டு வெல்ல முடியும்.
மிஸ்டர் யுனிவர்ஸ்: ஆணழகன் போட்டியில் வென்றவர்களுக்கு வெற்றி தொகை மட்டுமின்றி புகழ் வெளிச்சமும் கிடைக்கும். அதை வைத்து அவர்கள் அடுத்த கட்டத்திற்குச் செல்லலாம். தமிழ் சினிமாவில் இப்போது டாப் நடிகர்களில் ஒருவராக இருக்கும் சரத்குமார் மிஸ்டர் மெட்ராஸ் ஆணழகன் போட்டியில் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது இளைஞர்கள் பலரும் இந்த ஆணழகன் போட்டியில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டுகிறார்கள். அதேபோல உலகெங்கும் பல ஆணழகன் போட்டிகளும் நடத்தப்படுகிறது. அப்படி தென்கொரியாவில் நடத்தப்பட்ட ஆணழகன் போட்டியைத் தமிழர்கள் மொத்தமாகக் கலக்கிவிட்டனர்.
தமிழர்கள்: ஒவ்வொரு ஆண்டும் தென்கொரியாவில் ஆணழகன் போட்டி நடைபெறும். அதன்படி இந்தாண்டு நடந்த 14ஆவது ஆணழகன் போட்டியில் இந்திய அணி சார்பில் கலந்து கொண்ட தமிழர்கள், மூன்று தங்கம், இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்ற மாஸ் காட்டினர். அதிலும் குறிப்பாகச் சரவணன் என்ற நபர் மிஸ்டர் யுனிவர்ஸ் பட்டத்தைத் தனதாக்கினார்.
பொதுவாக இந்த ஆணழகன் போட்டி எடை ரீதியாக நடத்தப்படும். மேலும், சற்று வயதானவர்களுக்குத் தனியாகவும் நடத்தப்படும். அதன்படி 90 கிலோ எடைப் பிரிவில் சரவணன் முதலிடம் பிடித்த நிலையில், 100 கிலோ எடைப் பிரிவில் கார்த்திகேசுவர் முதலிடம் பிடித்தனர்.
பதக்கங்கள்: அதேபோல 75 கிலோ எடைப் பிரிவில் மரிய ஜி ஜோ, 80 கிலோ எடைப் பிரிவில் மோகன் சுப்பிரமணியம் ஆகியோர் வெள்ளி வென்றனர். மேலும், வயது வாரியாக நடத்தப்பட்ட போட்டியில், 50 முதல் 60 வயது வரை பிரிவில் அருணாச்சலம் என்பவர் தங்கப் பதக்கத்தைத் தட்டி தூக்கினார். அதேபோல 60 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் ஜெயராமன் என்பவர் 4ஆவது இடம் பிடித்தார்.
இப்படி உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் வீரர்கள் கலந்து கொண்ட ஆணழகன் போட்டியில் தமிழர்கள் மிஸ்டர் யுனிவர்ஸ் தொடங்கிப் பல பதக்கங்களை வென்ற நிலையில், அவர்களை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகிறார்கள்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications