Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“மெய் சிலிர்க்குது”.. இஸ்ரோவின் முதுகெலும்பான தமிழர்கள்! தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தின் சாதனையாமே

Subscribe to Oneindia Tamil

சென்னை: சந்திரயான் 3 திட்டம் வெற்றிபெற்ற நிலையில், இதுவரை இஸ்ரோ கையாண்ட 3 சந்திரயான் திட்டங்கள் மற்றும், மங்கல்யான் திட்டத்திற்கு தமிழர்களே இயக்குநர்களாக பணியாற்றி இருப்பது உங்களுக்கு தெரியுமா? அவர்களின் கல்வி விபரங்களை பார்ப்போம்.

மயில்சாமி அண்ணாதுரை: கடந்த 2008 ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான் 1 திட்டத்தின் இயக்குநராக இருந்தவர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை. கோயம்புத்தூர் மாவட்டம் கிணத்துக்கிடவு பகுதியை சேர்ந்த இவர் பெருமைமிகு சென்னை அண்ணா பல்கலைக்கழகம், கோவை பிஎஸ்ஜி கல்லூரி மற்றும் கோவை அரசு தொழில்நுட்ப கல்லூரிகளில் பயின்று இருக்கிறார்.

 Tamils are working as directors for 3 Chandrayaan projects and Mangalyaan project

வனிதா முத்தையா: கடந்த 2019 ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான் 2 விண்கல திட்டத்தின் இயக்குநராக செயல்பட்டு இருக்கிறார். சென்னையை சேர்ந்த இவர் தற்போது அண்ணா பல்கலைக்கழகமாக இருக்கும் அப்போதைய கிண்டி பொறியியல் கல்லூரியில் பயின்றவர்.

 Tamils are working as directors for 3 Chandrayaan projects and Mangalyaan project

வீரமுத்துவேல்: தற்போது வெற்றிகரமாக நிலவை தொட்ட சந்திரயான் 3 திட்டத்தின் இயக்குநர் இவர்தான். விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த இவர் சென்னை இந்திய தொழில்நுட்ப கல்லூரியில் பயின்று இருக்கிறார். இவருக்கு தற்போது முதலமைச்சர் முக ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்தி உள்ளார்.

 Tamils are working as directors for 3 Chandrayaan projects and Mangalyaan project

சிவன்: இவர்கள் மூன்று பேரும் சந்திரயான் திட்டங்களின் திட்ட இயக்குநராக இருந்தவர்கள் இவர்கள் அல்லாமல் இஸ்ரோ முன்னாள் தலைவராக இருந்த சிவனையும் நம்மால் மறக்க முடியாது. கன்னியாகுமரி மாவட்டத்தின் ஒரு சாதாரண கிராமத்தில் இருந்து வந்த சிவன், மதுரை பல்கலைக்கழகம், மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, ஐஐஎஸ்சி பெங்களூர், மும்பை ஐஐடியில் பயின்றவர். சந்திரயான் 2 ஏவப்படும்போது இஸ்ரோவின் தலைவராக இருந்தது இவர்தான். அப்போது அனுப்பப்பட்ட ஆர்பிட்டர்தான் இப்போது சந்திரயான் 3 திட்டத்துக்கு பெரும் உதவியை செய்து இருக்கிறது.

சுப்பையா அருணன்: இதேபோல் மங்கல்யான் திட்டத்தின் இயக்குநரும் தமிழர்தான். திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடியை அடுத்த கோதைசேரி கிராமத்தை சேர்ந்த கோவையில் பொறியியல் படித்தார். அதை தொடர்ந்து திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம்சாராய் விண்வெளி மையத்தில் இவர் பணியில் சேர்ந்தார். 2013 ஆம் ஆண்டில் மங்கள்யான் செயற்கைக்கோள் உருவாக்கும் பணியில் திட்ட இயக்குநர் இவர்தான்.

நம்பி நாராயணன்: இந்தியா தற்போது வெற்றிகரமாக விண்ணில் ராக்கெட்டுகளை செலுத்தி வருகிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் நம்பி நாராயணன் தான். ராக்கெட்டுகளில் உள்ள கிரையோஜனிக் எஞ்சின் நிறுவனரே இவர்தான். கன்னியாகுமரியை சேர்ந்த இவர் மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் படித்தார். அதன் பின் அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் முதுகலை பயின்றார்.

அப்துல் கலாம்: இத்தனை விஞ்ஞானிகளை பற்றி பேசிவிட்டு இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை சொல்லாமல் இருக்க முடியுமா. இந்திய ஏவுகணை நாயகன் என்று போற்றப்படும் அப்துல் கலாம் பொக்ரான் 2 அணு ஆயுத பரிசோதனையில் பெரும் பங்காற்றியவர். ராமேஸ்வரத்தில் சாதாரண ஏழை குடும்பத்தில் பிறந்து திருச்சி தூய வள்ளலார் கல்லூரி, சென்னை MIT உள்ளிட்ட கல்லூரிகளில் படித்து இருக்கிறார்.

இதனை சுட்டிக்காட்டி தமிழ்நாட்டின் கல்வியே சிறந்தது என்று பலர் கருத்திட்டு வருகிறார்கள். மாநில பாடத்திட்டம், புதிய கல்விக் கொள்கை தொடர்பாக விவாதங்கள் தொடர்ந்து வரும் நிலையில், இவர்களில் பெரும்பாலானோர் மாநில பாடத் திட்டங்களில் பயின்றவர்கள் எனவும், அவர்களே இஸ்ரோவின் பெரிய பொறுப்புகளில் அமர்ந்து உள்ளார்கள் எனவும் சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+