“நரகம்”.. எல்லாமே போச்சு! சோறு, தண்ணி இல்லாம.. சூடான் சோகங்களை பகிர்ந்த சென்னை திரும்பிய தமிழர்கள்
சென்னை: சூடானில் நடைபெற்று வரும் உள்நாட்டு போரில் சிக்கி இருந்த 9 தமிழர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டு இருக்கும் நிலையில், அங்கு தாங்கள் சந்தித்த துயரங்களையும், உள்நாட்டு போரினால் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளையும் தெரிவித்து உள்ளனர்.
"தற்போது என்னிடம் ஒரு ஜோடி ஆடையும் பாஸ்போர்ட்டுமே உள்ளது. மொத்த பணமும் உடைமைகளும் போரில் அழிந்துவிட்டன. அனைத்து நம்பிக்கைகளையும் இழந்துவிட்டேன்." சூடான் போரில் சிக்கி சென்னை திரும்பிய திவ்யா ராஜசேகரன் என்ற பெண் கண்ணீருடன் பேசிய வார்த்தைகள் இவை.

சூடான் போரின் வலியையும் வேதனையையும் தனது முகத்திலும் பேச்சிலுமே உணர முடியும் அளவுக்கு வாழ்க்கையையே அங்கு தொலைத்துவிட்டு உயிர் பிழைத்தால்போதும் என்று எண்ணி தமிழ்நாட்டுக்கு திரும்பி இருக்கிறார் திவ்யா.
சூடானில் ராணுவத்துக்கும் துணை ராணுவத்துக்கும் இடையிலான போரில் 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு இருக்கும் நிலையில், இந்திய அரசின் ஆபரேசன் காவேரி திட்டத்தின் மூலம் நேற்று 360 இந்தியர்கள் விமானம் மூலம் சூடானில் இருந்து தலைநகர் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களில் 9 தமிழர்களை தமிழ்நாடு அரசு விமானம் மூலம் இன்று சென்னை விமான நிலையத்துக்கு அழைத்து வந்தது.

சூடானில் உயிரை கையில் பிடித்துக்கொண்டு பதைபதைப்போடு நாட்களை நகர்த்திய 9 தமிழர்கள் சென்னைக்கு திரும்பியபோது அவர்கள் முகத்தில் ஒருவித நிம்மதி தென்பட்டாலும், வாழ்க்கையை தொலைத்த வாட்டமும் வலியையும் வேதனையையும் பார்க்க முடிந்தது. சூடானில் இருந்து அழைத்து வரப்பட்ட இந்த 9 தமிழர்களில் ஒருவர்தான் மடிப்பாக்கத்தை சேர்ந்த திவ்யா.
இன்று மதியம் டெல்லியில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு வந்த திவ்யா தற்போது தன்னிடம் ஒரு ஜோடி ஆடையும், பாஸ்போர்ட்டும் மட்டுமே இருப்பதாக வேதனையுடன் தெரிவித்து உள்ளார். 8 ஆண்டுகள் சூடானில் பணி நிமித்தமாக தங்கி வாழ்க்கையை மகிழ்ச்சியோடு கழித்து வந்த திவ்யா, தான் வாழ்ந்த நாடு கண்முன்னே போரில் கருகுவதை கண்டு கலங்கிப்போய் உள்ளார்.
சம்பாதித்த மொத்த பணத்தையும், பொருட்களையும் போரிலேயே போட்டுவிட்டு வெறும் கையோடு நாடு திரும்பி இருக்கும் திவ்யா, இப்போது தனது வாழ்க்கையை புதிதாக தொடங்க வேண்டும் என்றும், தன்னிடம் எந்த நம்பிக்கையும் இல்லை என்றும் புலம்பியுள்ளார். "நாங்கள் 2 நாட்களில் போர் முடிந்துவிடும் என்று நினைத்தோம். ஆனால், 3 வது நாளில் இருந்துதான் எங்களுக்கு பயம் அதிகரிக்கத் தொடங்கியது." என்று கூறுகிறார் சூடானில் இருந்து நாடு திரும்பிய வேலூரை சேர்ந்த சோபியா என்ற பெண்.
போரில் ஈடுபட்டு வரும் துணை ராணுவப் படையின் தலைமையகத்துக்கு அருகாமையில்தான் சோபியாவின் வீடு உள்ளதாம். "எனது கார், பணம், விலை உயர்ந்த பொருட்களை போர் தொடங்கிய 8 வது நாளிலேயே இழந்துவிட்டேன். நாங்கள் நாடோடிகளாகிவிட்டோம்." என்று வேதனையுடன் தெரிவித்து உள்ளார் சோபியா.

"நாங்கள் தயிர் சாதத்தையும் ஊறுகாயையும் சாப்பிட்டு சமாளித்து வந்தோம். சில நாட்களில் உணவும் குடிநீரும் தீர்ந்து பசியில் அவதிப்பட்டோம். நான் கர்ப்பிணியாக உள்ளேன். இந்த இக்கட்டான நேரத்தில் இந்திய தூதரக அதிகாரிகள் என்னை தொடர்புகொண்டனர்." என்றார் சோபியா. தங்களுக்கு உதவிய இந்திய தூதகரத்துக்கு அவர் நன்றி தெரிவித்து உள்ளார்.
மற்றொரு தமிழரான ராஜசேகரன் தெரிவிக்கையில், "எனது வீட்டின் கதவை சூடான் ராணுவத்தினர் தட்டினார்கள். நான் திறந்தபோது, இந்தியரா என்று கேட்டனர். ஆம் என்று சொன்னேன். உங்களை துன்புறுத்த மாட்டோம் என்று கூறினார்கள். உணவு, தண்ணீர், பணம் கேட்டு எங்கள் காரை எடுத்துச் சென்றனர்." என்றார்.
-
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications