சினிமாவில் வருமே.. ஹீரோ ஓபனிங் சீனுக்கு பூபோடற மாதிரி.. தமிழச்சிக்கு அப்படி வரவேற்பு.. மந்தைவெளியில்

தென்சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சியை மக்கள் பூக்களை தூவி வரவேற்கிறார்கள்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சினிமாவுல ஹீரோவுக்கு ஓபனிங் சீனில் பூக்களை கொட்டுவார்களே.. அப்படி கொட்டி வரவேற்கிறார்கள் தென்சென்னையில் தமிழச்சியை!

தென்சென்னை வேட்பாளராக களமிறங்கி உள்ள தமிழச்சி தங்கபாண்டியன் இறுதிகட்ட பிரச்சாரத்தில் உள்ளார். தொகுதியில் உள்ள அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து ஆதரவு திரட்டுகிறார். அதேபோல, அவருக்கு தொகுதி மக்களும் ஆட்டம், பாட்டம்,என வரவேற்பு அளிக்கிறார்கள்.

Tamizhachi Thanga Pandian Campaigned in Mandaveli

மந்தைவெளி பகுதிகளில் உள்ள வீடுகளில் இப்படித்தான் வாக்கு திரட்ட போனார். அப்போது தமிழச்சிக்கு ஆரத்தி எடுத்து ஒரு பக்கம் வரவேற்றார்கள் என்றால், மொட்டை மாடியில் நின்றுகொண்டு, பூக்களை கூடைகூடையாக கொட்டியும் வரவேற்கிறார்கள்!

நேற்றுகூட சோழிங்க நல்லூர் பகுதியில் பிரச்சாரம் செய்தபோது, "நான் இந்த மண்ணின் மகள். இதே பகுதியில் இருக்கும் நீலாங்கரையில் தான் என் வீடு இருக்கு. நீங்கள் எந்த பிரச்னைக்காகவும் என்னை எப்போ வேணும்னாலும் அணுகலாம், உங்களுக்கு உழைக்க எனக்கு ஒரு சந்தர்ப்பம் தந்தால் போதும்.

நம் பகுதியில குடிநீர், போக்குவரத்து பிரச்னை இருக்கிறது எனக்கு நல்லா தெரியும். என்னவென்று எனக்கு நன்றாகவே தெரியும். அதை நிரந்தரமா தீர்க்கவும் என்கிட்ட திட்டங்கள் இருக்கு" என்றார்.

வெயில் மண்டையை பொளந்து கட்டுகிறது என்பதால், மதிய நேரங்களில் தமிழச்சி எங்கு இருக்கிறாரோ அவருக்கு மக்கள் ஜூஸ் கொடுத்து அன்பை வெளிப்படுத்துகிறார்கள். வாக்கு சேகரித்த பிறகு அந்த ஏரியாவில் உள்ள ஆட்டோவில் ஏறி அடுத்த ஏரியாவுக்கு சென்று ஓட்டை திரட்டி வருகிறார் தமிழச்சி!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+