கலக்கும் தமிழச்சி.. "ம்மா.. என்கிட்ட சொன்னதை அப்படியே இவங்க கிட்ட சொல்லுங்க"!
தென்சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் பிரச்சாரம் செய்தார்.
Recommended Video

சென்னை: "கேட்டுக்கங்க.. ம்மா.. நீங்க என்கிட்ட சொன்னதை இவங்க கிட்ட சொல்லுங்க.." என்று தென் சென்னை பிரச்சாரத்தில் பட்டையை கிளப்பி கொண்டு வாக்கு சேகரித்து வருகிறார் தமிழச்சி தங்கபாண்டியன்!
தென்சென்னை தொகுதியில் இரு பெரும் வாரிசுகள், இரு பெரும் கட்சியில் களமிறக்கப்பட்டுள்ளனர். ஒருத்தருக்கு ஒருத்தர் சளைத்தவர்கள் இல்லை. ஆளுக்கொரு புறம் பிரச்சாரம் செய்து தென்சென்னையை ரவுண்டு கட்டி வருகின்றனர்.
இதில் தமிழச்சி தங்கபாண்டியன், சந்து பொந்து ஒன்றுவிடவில்லை.. எல்லாவற்றிற்குள்ளும் நுழைந்து அங்கிருந்த மக்களிடம் வாக்கு கேட்டார். சில சந்துகளில் நடக்கக்கூடிய வழியில்லை.. அப்படியும் உள்ளே புகுந்து வீடுதோறும் ஓட்டு கேட்டார்.

பஸ் ஸ்டாண்டு
பிறகு மெயின்ரோடுக்கு வந்தார். வழியில் சென்று கொண்டிருந்த ஒவ்வொருவரிடமும் கையில் இருந்த நோட்டீசை தந்தார். அப்படியே நடந்து பஸ் ஸ்டேண்ட் பக்கம் வந்தார். அங்கே ஒன்றிரண்டு பேர் பஸ்ஸுக்காக காத்திருந்தனர்.

கையை பிடித்தார்
அவர்களிடம் தந்துவிட்டு திரும்பும்போது, ஒரு பெண்மணி அப்போதுதான் பஸ் ஸ்டேண்ட் வந்து நின்றார். தமிழச்சியை பார்த்ததும் அவருக்கு முகத்தில் ஒரே பூரிப்பு.. தமிழச்சி நோட்டீசை அங்கே நீட்ட.. அந்த பெண்ணோ, தமிழச்சியின் கையை கெட்டியாக பிடித்து கொண்டார்.

இப்ப சொல்லுங்க
அவரிடம் ஏதோ சொன்னார். உடனே காமிரா, செய்தியாளர்கள் பக்கம் திரும்பிய தமிழச்சி அனைவரையும் தன்னருகே அழைத்தார். தமிழச்சியிடம் மைக்கை நீட்டியபோது, "ம்மா.. என்கிட்ட என்ன சொன்னீங்களே அதை இவங்க கிட்ட சொல்லுங்க" என்கிறார்.

கேட்டீங்க இல்லை?
அந்த பெண்மணியும்,"நான் பக்கா அதிமுக.. ஆனாலும் எனக்கு அதிமுக புடிக்கல.. அதனால திமுகவில சேரப்போறேன்" என்றார். இதை பெருமையாக பார்த்து கொண்டிருந்த தமிழச்சி, "கேட்டீங்களா.. சொன்னதை கேட்டீங்க இல்லை.. அதனால நிறைய பிரச்சனை இங்க இருக்கு.. எல்லாம் தீர்க்கப்பட்டுவிடும்.. தளபதிதான் அடுத்த முதல்வர்" என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications