அடடா.. பொங்கல் வாழ்த்திலும் கூட தாமரையை விட மாட்டேங்குறாரே இந்த தமிழிசை!
தமிழக மக்களுக்கு தமிழிசை சவுந்தராஜன் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை: வாழ்த்து சொன்னால் கூட தமிழிசை சவுந்தராஜன் தாமரையை விட மாட்டார் போலிருக்கு.
நாளை தமிழர் திருநாள் என்பதால் மாநிலம் முழுவதும் களை கட்டி வருகிறது. இதற்காக தலைவர்கள் மக்களுக்கு தங்கள் வாழ்த்து செய்தியை உரித்தாக்கி வருகிறார்கள்.
இதற்காக தங்கள் வீடுகளில் பொங்கலை சிறப்பாக கொண்டாடும் மும்முரத்திலும் தலைவர்கள் இறங்கி உள்ளனர்.

வாள்சண்டை, மான்கொம்பு
இன்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் கட்சி அலுவலகத்தில் பாரம்பரியத்துடன் பொங்கலை நிர்வாகிகள், தொண்டர்களுடன் தமிழிசை கொண்டாடினார். இந்த விழாவில் வாள்சண்டை, மான்கொம்பு சண்டை வீரர்கள் பங்கேற்றிருந்தனர்.

குஷியான தொண்டர்கள்
அப்போது அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக இரண்டு கைகளிலும் மான் கொம்பினை பிடித்து சுழட்டி காட்டினார். தமிழிசையின் கைகளில் மான்கொம்பினை பார்த்ததும், சுற்றியிருந்த கலைஞர்கள் உட்பட பாஜக தொண்டர்கள் எல்லாருமே குஷியாகிவிட்டனர்.

வாழ்த்து அறிக்கை
இதை தொடர்ந்து தமிழக மக்கள் அனைவருக்கும் தமிழிசை சவுந்தராஜன் அறிக்கை மூலமாக பொங்கல் வாழ்த்தினை தெரிவித்துள்ளார். தன் வாழ்த்து அறிக்கையில் அவர் சொன்னதாவது:

தாமரை பொங்கல்
"தாமரை பொங்கலாக தமிழ்ப் பொங்கல் மலரட்டும். தாமரை மலர்போல அனைவரின் வாழ்வும் மலர பொங்கல் நல்வாழ்த்துக்கள்" என்று தெரிவித்துள்ளார்.

சூரியனுக்கு நன்றி?
பொங்கல் வாழ்த்தில்கூட மறக்காமல் தன் ட்ரேட் மார்க் தாமரையை பதிவிட்டதுதான் தமிழிசையின் ஸ்பெஷாலிட்டியே!! அது சரி.... "சூரியனுக்கு" நன்றி சொல்லும் விதமாகதானே பொங்கல் கொண்டாடப்படுகிறது??
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications