தூங்கி வழியும் TAMPCOL நிறுவனம்.. சுகாதாரத்துறை செயலர் மாறி பல மாதமாகியும் நோ அப்டேட்!
சென்னை: தமிழ்நாடு மருத்துவ தாவர பண்ணைகள் மற்றும் மூலிகை மருத்துவக் கழகத்தின் (TAMPCOL) இணையப்பக்கம் 6 மாதங்களுக்கு மேல் அப்டேட் செய்யப்படாமல் இருப்பது இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
தமிழக சுகாதாரத்துறையின் கீழ் இயங்கும் இந்த நிறுவனமானது சித்தா, ஆயுர்வேதா, யுனானி உள்ளிட்ட மருத்துவத்துக்கு தேவையான மருந்துகளை தயாரிக்கும் பணிகளை செய்து வருகிறது.

சித்த மருத்துவத்தில் நோயாளிகளுக்கு கொடுக்கப்படும் சூரணங்கள், தைலங்கள், எண்ணெய்கள், மற்றும் இன்னும் பல மூலிகை பொருட்களை டாம்ப்கால் தயாரிக்கிறது. அரசு நிறுவனமான டாம்ப்காலை நம்பி பெரும்பாலானோர் சித்த மருந்துகளை வாங்குகின்றனர்.
இந்நிலையில் இப்போது கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வரும் சூழலில், அலோபதி மருந்துக்கு மாற்றாக மண் சார்ந்த மருத்துவமான சித்தாவுக்கு மாறி வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அவ்வாறு சித்த மருத்துவத்துக்கு மாறுபவர்கள் டாம்ப்கால் நிறுவனத்தின் இணையதளப் பக்கத்திற்குள் சென்று அதன் செயல்பாட்டு முறைகளை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவது வழக்கம்.
இந்நிலையில் தமிழ்நாடு மருத்துவ தாவர பண்ணைகள் மற்றும் மூலிகை மருத்துவக் கழகத்தின் (TAMPCOL) இணையப்பக்கம் கடந்த 6 மாதங்களுக்கு மேல் செயல்படாமல் இருப்பது இப்போது தெரிய வந்துள்ளது. அதற்கு சாட்சியாக சுகாதாரத்துறை செயலாளர் பெயரே அங்கு தவறாக பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
சுகாதாரத்துறை செயலாளராக ராதாகிருஷ்ணன் உள்ள நிலையில் பத்திரபதிவுத்துறை செயலாளராக உள்ள பீலா ராஜேஷ் பெயர் தான் இன்னும் டாம்ப்கால் நிறுவனத்தின் இணையப்பக்கத்தில் உள்ளது. இதுமட்டுமல்லாமல் டாம்ப்காலின் புதிய தயாரிப்புகள் குறித்த எந்த விவரம் வெளியிடப்படவில்லை.
இது குறித்து உரிய அதிகாரிகள் கவனத்தில் கொண்டு மக்களுக்கு நம்பகமான தகவலை அளிக்கும் வகையில் செயல்பட வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications