எங்கள் வீட்ல "அது" இருக்கு! உங்கள் வீட்ல? இனி கட்டாயம்! மின்சார வாரியத்தின் திடீர் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: உங்கள் வீடுகளில் ஆர்சிடி எனும் பாதுகாப்பு சாதனத்தை பொருத்திவிட்டீர்களா என கேட்டுள்ள தமிழ்நாடு மின்சாரம் வாரியம் அதன் அவசியத்தையும் குறிப்பிட்டுள்ளது. மேலும் ஆர்சிடி என்றால் என்ன என்பதையும் பார்ப்போம்.

இதுகுறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: எங்க வீட்ல RCD இருக்கு உங்க வீட்ல❓
உங்கள் வீட்டில் RCD பொருத்திய புகைப்படங்களை 🤳எடுத்து, Twitter-ல் #TANGEDCO_RCD_Safety என்ற ஹேஷ்டேக்குடன் பதிவேற்றவும். ⚡️

tangedco tneb safety

தமிழ்நாடு மின்சார வாரியம் (TANGEDCO) மின்சார பாதுகாப்பை மேம்படுத்தும் நடவடிக்கையாக, அனைத்து வீடுகளிலும் RCD பொருத்துவதை கட்டாயமாக்கியுள்ளது.

உங்கள் வீட்டில் RCD இன்னும் பொருத்தவில்லை என்றால், உடனடியாக பொருத்துங்கள். நம் அன்பானவர்களின் உயிரைக் காப்போம்! இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஏற்கெனவே தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய செயலாளர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் மின் பழுது மற்றும் மின்கசிவால் விபத்து ஏற்படும்போது மனித உயிரிழப்புகள் உண்டாகின்றன. இதைத் தடுக்க, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், மின்சாரப் பகிர்மான விதித் தொகுப்பின்படி, புதிய மின் இணைப்பு பெறுபவர்கள் 'ஆர்சிடி'என அழைக்கப்படும் 'ரெசிடுயல் கரண்ட் டிவைஸ்' என்ற உயிர் காக்கும் சாதனத்தை தங்களுடைய மின்னிணைப்பில் பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மழைக்காலங்களில் அதிகரித்து வரும் மின் விபத்துகள் மற்றும் மனித உயிரிழப்புகளைத் தடுப்பதற்கு புதிய மின் நுகர்வோர்கள் மட்டுமல்லாது தற்போதுள்ள அனைத்து மின்நுகர்வோர்களும் ஆர்.சி.டியை அவரவர் மின் இணைப்பில் தவறாமல் பொருத்தி விபத்தை தவிர்க்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். கடந்த சில மழைக்கால மாதங்களில் பல வகைகளில் மின் விபத்துகளால் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

'ஆர்சிடி' உயிர் காக்கும் சாதனத்தை மின் இணைப்பில் பொருத்துவதன் மூலம் இத்தகைய விலைமதிப்பற்ற மனித உயிர்கள் இழப்பைத் தவிர்த்திருக்க முடியும். எனவே, வீடு, கடை, தொழில், பண்ணை வீடு, கல்வி நிறுவனங்கள், பொது இடங்கள் மற்றும் தற்போதுள்ள அனைத்து வகையான மின் நுகர்வோர்களும், மனித உயிர் பாதுகாப்பின் அடிப்படைத் தேவையான 'ஆர்சிடி'யை அவரவர் மின்இணைப்பில் நிறுவ அறிவுறுத்தப்படுகின்றனர். இவ்வாறு அந்த வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கருவியின் விலை ரூ 2000 இருக்கலாம் என்கிறார்கள். மேலும் இதை மின் இணைப்பில் பொருத்தினால் இதன் மூலமாகவே மின்சாரமானது மற்ற கருவிகளுக்கு செல்லும். ஒரு வேளை வீட்டில் எர்த் அடித்தாலும் உடனே இந்த ஆர்சிடி பிரேக்கர் மின் இணைப்பை தானாகவே துண்டித்துக் கொள்ளும். பொதுவாக மனித உடல் 30 மில்லி ஆம்ப் (30mA) வரை மட்டுமே மின்சாரத்தை தாங்கும். அதற்கு மேல் போனால் உயிரிழப்பு ஏற்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+