தமிழ்நாட்டில் பல்வேறு வீடுகளில்.. மின்வாரியம் அதிரடி சோதனை.. அடுத்தடுத்து ஃபைன்.. என்ன நடந்தது?
சென்னை: தமிழ்நாட்டில் பல்வேறு பகுதியில் மின்வாரிய கூட்டு அதிரடி சோதனை நடத்தி உள்ளது. மின் திருட்டு மற்றும் விதிமீறல் கண்டுபிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பலர் வீடுகளில் திருட்டு இணைப்பு எடுத்துள்ளனர். சிலர் ஒரே இணைப்பு எடுத்து அதை வேறு வேறு வீடுகளுக்கு வழங்குகின்றனர். இன்னும் சிலர் வாடகை வீடு இணைப்புகளில் முறைகேடு செய்கின்றனர். இதை எல்லாம் தற்போது தமிழ்நாடு மின்சார வாரியம் சோதனை செய்ய தொடங்கி உள்ளது.
இந்த சோதனையின் அடிப்படையில் தமிழ்நாடு மின்சார வாரியம் பல அதிரடி நடவடிக்கைகளை எடுக்க தொடங்கி உள்ளது. இதற்கான ரெய்டு நடவடிக்கைகள் தற்போது தொடங்கி தமிழ்நாடு முழுக்க அடுத்த சில மாதங்கள், வாரங்களுக்கு நடக்க உள்ளது.
புதிய மின் இணைப்பு
இனி தமிழ்நாட்டில் புதிய மின் இணைப்புகளை வழங்க அதிகபட்சம் 3 நாட்கள் மட்டுமே எடுக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, இனி கடைகளை உள்ளடக்கிய தாழ்வழுத்த பிரிவில் 3 நாட்களுக்குள் மின் இணைப்பு கொடுக்க வேண்டும்.

புதிய மின் இணைப்புக்கு விண்ணப்பிக்கும் போது அங்கே கூடுதல் மின் சாதனங்களான சிறிய அளவிலான டிரான்ஸ்பார்மர் அமைக்க தேவை இல்லாத பட்சத்தில் 3 நாட்களில் மின்சாரம் தர வேண்டும். இல்லையென்றால் 7 நாட்களில் மின்சாரம் தர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இது போக மேல்நிலை கேபிள்கள் (OH) உள்ள இடங்களில் நிலத்தடி கேபிள்களுக்கு (UG) வசூலிக்கப்படும் அதிக மேம்பாட்டு கட்டணம் வசூலிக்கப்படுவதாக நுகர்வோர் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. இப்படி புகார்கள்; எழுந்ததையடுத்து, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (TNERC) உடனடியாக அதிக கட்டணம் வசூலிப்பதை நிறுத்துமாறு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
நுகர்வோர் கணக்கில் அதைத் திருப்பிச் செலுத்தி அவர்களின் அடுத்தடுத்த பில்களுடன் சரிசெய்துகொள்ளவும் என்று உத்தரவிட்டுள்ளது மேல்நிலை கேபிள்கள் (OH) உள்ள இடங்களில் மின்கட்டணம் குறைவாகவும், நிலத்தடி கேபிள்களுக்கு (UG) அதிக மேம்பாட்டு கட்டணமும் வசூலிக்கப்படுவது வழக்கமாக உள்ளது.
இதற்காக பயன்படுத்தப்படும் மென்பொருளானது உடனடியாக திருத்தப்பட வேண்டும், மேலும் தற்போதுள்ள ஏற்பாடுகளுடன் மேம்பாட்டுக் கட்டணங்களை மேலும் வசூலிக்க அனுமதிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
மின்வாரியத்தில் நவீன முடிவுகள்
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் அடுத்தடுத்து பல நவீனங்கள் நடந்து வருகின்றன. தமிழகத்தில் உள்ள மின் மதிப்பீட்டாளர்களுக்கு மீட்டர் ரீடிங் மேற்கொள்வதற்கான புதிய ஆண்ட்ராய்டு போன்களை வாங்க தலா ₹10,000 விரைவில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. TNPDCL கடந்த ஆண்டு ஆப்ஸ் அடிப்படையிலான கணக்கீடு அமைப்பை அறிமுகப்படுத்தியது.
ஆனால் இத்தனை நாட்களாக ரீடிங் எடுப்பவர்கள் மெதுவான தொலைபேசிகள் மற்றும் நெட்வொர்க் சிக்கல்களால் பிரச்சனைகளை எதிர்கொண்டனர். கையில் போன் இருந்தும் அவர்கள் சரியான ரீடிங் எடுக்க முடியாத சூழல் இருந்தது. இதையடுத்தே அவர்களுக்கு புதிய ஆண்ட்ராய்டு போன்களை வாங்க தலா ₹10,000 விரைவில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
புதிய நடவடிக்கையானது பில்லிங்கை ஒழுங்குபடுத்துவதையும், பிழைகளைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதை ஒட்டியே இப்போது ரெய்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications