இனிமேல் 3 நாட்கள்தான் லிமிட்.. இபி மின்சார வாரியம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு.. நோட் பண்ணுங்க பாஸ்!
சென்னை: தமிழ்நாட்டு மக்களுக்கு பயன் அளிக்க கூடிய முக்கியமான அறிவிப்பு ஒன்றை மின்சார வாரியம் வெளியிட்டு உள்ளது.
இனி தமிழ்நாட்டில் புதிய மின் இணைப்புகளை வழங்க அதிகபட்சம் 3 நாட்கள் மட்டுமே எடுக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, இனி கடைகளை உள்ளடக்கிய தாழ்வழுத்த பிரிவில் 3 நாட்களுக்குள் மின் இணைப்பு கொடுக்க வேண்டும்.

புதிய மின் இணைப்புக்கு விண்ணப்பிக்கும் போது அங்கே கூடுதல் மின் சாதனங்களான சிறிய அளவிலான டிரான்ஸ்பார்மர் அமைக்க தேவை இல்லாத பட்சத்தில் 3 நாட்களில் மின்சாரம் தர வேண்டும். இல்லையென்றால் 7 நாட்களில் மின்சாரம் தர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த பிப்ரவரி வெளியான அறிவிப்பு இந்த மாதம் நடைமுறைக்கு வருகிறது,
புதிய முறை; இது போக மேல்நிலை கேபிள்கள் (OH) உள்ள இடங்களில் நிலத்தடி கேபிள்களுக்கு (UG) வசூலிக்கப்படும் அதிக மேம்பாட்டு கட்டணம் வசூலிக்கப்படுவதாக நுகர்வோர் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. இப்படி புகார்கள்; எழுந்ததையடுத்து, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (TNERC) உடனடியாக அதிக கட்டணம் வசூலிப்பதை நிறுத்துமாறு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
நுகர்வோர் கணக்கில் அதைத் திருப்பிச் செலுத்தி அவர்களின் அடுத்தடுத்த பில்களுடன் சரிசெய்துகொள்ளவும் என்று உத்தரவிட்டுள்ளது மேல்நிலை கேபிள்கள் (OH) உள்ள இடங்களில் மின்கட்டணம் குறைவாகவும், நிலத்தடி கேபிள்களுக்கு (UG) அதிக மேம்பாட்டு கட்டணமும் வசூலிக்கப்படுவது வழக்கமாக உள்ளது.
இதற்காக பயன்படுத்தப்படும் மென்பொருளானது உடனடியாக திருத்தப்பட வேண்டும், மேலும் தற்போதுள்ள ஏற்பாடுகளுடன் மேம்பாட்டுக் கட்டணங்களை மேலும் வசூலிக்க அனுமதிக்கப்படாது. இதுவரை வசூலிக்கப்பட்டுள்ள கூடுதல் மேம்பாட்டுக் கட்டணங்கள் விண்ணப்பதாரர்கள் அல்லது நுகர்வோருக்கு உடனடியாகத் திருப்பித் தரப்பட வேண்டும் அல்லது முன்கூட்டியே நுகர்வுக் கட்டணமாகக் கருதி ஆணையத்திடம் தெரிவிக்க வேண்டும் என்று ஆணையம் கடிதத்தில் தெரிவித்துள்ளது.
இனிமேல் மேல்நிலை கேபிள்கள் (OH) உள்ள இடங்களில் நிலத்தடி கேபிள்களுக்கான (UG) அதிக மேம்பாட்டு கட்டணம் வசூலிக்கப்பட கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இபி பில்; இது போக சென்னை மட்டுமின்றி அடுத்த சில வாரங்களில் தமிழ்நாடு அடுக்குமாடி குடியிருப்புகளில் மின்கட்டண முறையில் மாற்றம் ஏற்படும் என்று தகவல்கள் வருகின்றன. தமிழ்நாட்டில் மின் கட்டண முறையில் முக்கியமான சில மாற்றங்களை வரும் நாட்களில் நாம் எதிர்பார்க்கலாம் என்று மின்சார வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பொது விநியோக இணைப்புகளுக்கு உருவாக்கப்பட்ட I-E எனப்படும் புதிய கட்டண வகையை வரும் நாட்களில் தமிழ்நாடு முழுக்க செயல்படுத்த உள்ளனர். தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கடந்த நவம்பர் மாதம் சிறிய அடுக்குமாடி குடியிருப்புகளில் பொதுவான மின்சாரம் வழங்குவதற்கு I-E எனப்படும் புதிய கட்டண வகையை உருவாக்கி, நவம்பர் 1 முதல் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது.
ஆனால் இது முறையாக செயல்படுத்தப்படவில்லை. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது என்ன புதிய முறை: அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள பொது விநியோக இணைப்புகளுக்கு கடந்த ஆண்டு உருவாக்கப்பட்ட 1-டி பிரிவின் கீழ் தற்போது ஒரு யூனிட்டுக்கு ரூ.8.15 விதிக்கப்படுகிறது. இது முதலில் 8 ரூபாயாக இருந்தது. அது பின்னர் 8.15 ரூபாயாக உயர்த்தப்பட்டது. இது மக்கள் இடையே விமர்சனங்களை ஏற்படுத்தியது.
இதற்காக 1 - இ என்ற பிரிவு புதிதாக உருவாக்கப்பட்டது. அதன்படி மூன்று தளங்கள் அல்லது அதற்கும் குறைவான அடுக்குமாடி குடியிருப்புகள், 10 குடியிருப்புகள் அல்லது அதற்கும் குறைவான குடியிருப்புகள் மற்றும் சான்ஸ் லிஃப்ட்கள் ஐ-இ பிரிவின் கீழ் கொண்டு வரப்பட்டு ஒரு யூனிட்டுக்கு ரூ.5.50 வசூலிக்கப்படும். இருப்பினும், TNERC உத்தரவின்படி, I-D மற்றும் I-E வகைகளுக்கு நிலையான கட்டணங்கள் ஒரு kW க்கு ரூ.102 ஆக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications