இபி பில் சர்ரென குறையும்.. இதைவிட பெஸ்ட் வழி கிடையாது.. தமிழக மின்வாரியமே சொன்ன சூப்பர் ஐடியா

Subscribe to Oneindia Tamil

சென்னை: மின்சார பில்லை கட்டுப்படுத்தும்.. மாதம் மாதம் இபி பில்லை குறைக்கும் முக்கியமான வழிமுறை ஒன்றை தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டு உள்ளது. மேற்கூரை சோலார் பேனல்கள் மூலம் மின்சார வசதி பெறுபவர்களை தமிழ்நாடு அரசு ஊக்குவித்து வருகிறது. இதற்கான விண்ணப்பங்களை தமிழ்நாடு அரசு வரவேற்று வருகிறது.

முதல்வரின் சூரிய கூரை மூலதன ஊக்குவிப்புத் திட்டம் தமிழக அரசால் 2013ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், நுகர்வோர் தங்கள் வீட்டில் மானிய விலையில் சோலார் PV அமைப்புகளை நிறுவலாம். இதற்கு 20,000 மானியம் தமிழக அரசால் வழங்கப்படும்.

tangedco eb

சோலார் PV அமைப்புகளை ஐந்து ஆண்டுகளுக்கு இலவச விரிவான பராமரிப்பு செய்யலாம். . சோலார் PV அமைப்புகளை நிறுவுவதால் மின்சார கட்டணம் குறையும். TANGEDCO சேவை இணைப்பு உள்ள தமிழக நுகர்வோர் மட்டுமே இந்தத் திட்டத்தின் கீழ் தகுதியுடையவர்கள். விண்ணப்பதாரர் முதல்வரின் சூரிய கூரை ஊக்குவிப்புத் திட்டத்திற்கு ஆன்லைனில் அல்லது ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம்.

https://pmsuryaghar.gov.in அல்லது https://tnebltd.gov.in/usrp/applycfa.xhtml ஆகிய லிங்கை கிளிக் செய்து இதை பயன்படுத்தலாம். உங்கள் வீடுகளில் தனியார் அல்லது அரசின் உதவியுடன் மேற்கூரையில் சோலார் அமைக்க வேண்டும். பொதுவாக மேற்கூரையில் சோலார் அமைக்க சதுர அடி பொறுத்து 50 ஆயிரம் முதல் 2-3 லட்சம் வரை செலவு ஆகும். மேற்கூரையில் சோலார் அமைத்தால் வீட்டில் பெரும்பாலும் மின்சார தேவை பூர்த்தி ஆகிவிடும். மழை காலம், பனி காலத்தில் 1-2 மணி நேர மின்சார நிலையத்தின் மின்சார சப்ளை தேவை மட்டும் இருக்கும்.

திட்டத்தின் பலன்கள்:

1) அரசின் மானியம் நேரடியாக கிடைக்கும்
2) மின்சார பில்கள் குறையும்
3) சேமிப்பு அதிகரிக்கும்
4) பராமரிப்பு செலவு அதிகம் இல்லை
5) மின்தடை பிரச்சனை இருக்காது

அதன்படி மேற்கூரை சூரியசக்தி மின் மூலம் 10 கிலோ வாட் வரை அமைக்க அனுமதி தேவை இல்லை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. வீடு உள்ளிட்ட கட்டடங்களில் 10 கிலோ வாட் வரை அமைக்க ஒப்புதல் பெற வேண்டியது இல்லை. தொழில்நுட்ப சாத்தியக்கூறு ஒப்புதல் இல்லாமல் இதற்கான பணிகளை செய்ய முடியும் என்று மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கூறி உள்ளது.

ஆய்வு: இதற்கு நேரடியாக மின்சார வாரியம் மூலம் அனுமதி பெற்றால்.. உடனே இபி அதிகாரிகள் வீட்டில் வந்து சோதனை செய்வார்கள். வீடுகளில் அதற்கான வசதிகள் இருக்கிறதா.. வீட்டில் சோலார் வைப்பதற்கு சாதகமான சூழல் இருக்கிறதா என்று ஆய்வுகளை மேற்கொள்வார்கள்.

மேற்கூரை சோலார் பேனல்கள் மூலம் மின்சார வசதி பெறுபவர்களுக்கு வழங்கப்படும் மானியம் தொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதில், உங்கள் வீட்டிற்கு சூரிய மேற்கூரை மூலம் சூரிய ஒளியின் பரிசை கொடுங்கள்!
1 கிவா ரூ30,000/-
2 கிவா ரூ 60,000/-
3 கிவா ரூ 78,000/- வரை மானியம். வழங்கப்படும்.
பூமியை பசுமையாக வைத்திருக்க உதவுங்கள். இணைய தளத்தில் முதலில் பதிவு செய்யவும். அடுத்து, விண்ணப்பியுங்கள்!

நீங்கள் மேற்கூரையில் சோலார் வைத்துள்ளதை அரசிடம் பதிவு செய்ய வேண்டும். அப்படி செய்திருக்கும் பட்சத்தில் அந்த குறைந்த பட்ச மின்சார தேவையை அரசே ஏற்றுக்கொள்ளும் திட்டம்தான் இது. பொதுவாக மேற்கூரையில் சோலார் இருந்தால்.. மாதம் உங்களுக்கு மின்சார வாரியத்தின் மின்சாரத்தில் 100 யூனிட் கூட அவசியம் இருக்காது. இருந்தாலும் நீங்கள் 300 யூனிட் வரை இலவசமாக பயன்படுத்த முடியும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+