தஞ்சாவூர் "திமிங்கலம்" மாட்டுது? அண்ணாமலைக்கு முகமே வாடி போச்சு.. ஆட்டத்தை கலைத்த "கூல்" தலைவர்? பலே
சென்னை: தேர்தல் பரபரப்புகள் உச்சக்கட்டத்தில் சென்றுகொண்டிருக்க, தஞ்சையில் நடைபெறும் அரசியல் நிகழ்வுகள் மிகுந்த வியப்பையும், அதே சமயம் குழப்பத்தையும் தந்து வருகிறது. என்ன நடக்கிறது தஞ்சாவூரில்?
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் சம்மந்தியும், தஞ்சை மாவட்ட காங்கிரஸ் தலைவருமான கிருஷ்ணசாமி வாண்டையாரை பாஜக தலைவர் அண்ணாமலை தனது கட்சியினர் படைசூழ சென்று சந்தித்த சம்பவம்தான், தற்போது தமிழக தேர்தல் களத்தில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.

செல்வப்பெருந்தகை: முக்கியமாக, காங்கிரஸ் கட்சிக்கு இன்னும் அந்த அதிர்ச்சி விலகவில்லையாம். இப்படி ஒரு சந்திப்பை கேள்விப்பட்டு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கிருஷ்ணசாமி வாண்டையாரை தொடர்புகொள்ள பல முயற்சித்தும் அவரது அழைப்பை வாண்டையார் அட்டெண்ட் பண்ணவில்லையாம். இதனால் காங்கிரசில் பதட்டம் அதிகரித்து கொண்டிருக்கிறதாம்.
எனவே தஞ்சையில் என்னதான் நடக்கிறது? மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு தகவல் பாஸ் பண்ணினாராம் செல்வப் பெருந்தகை... அதேபோல, அண்ணாமலை கிருஷ்ணசாமியை சந்திப்பதற்கு முன்பாகவே தினகரனுக்கு விஷயம் தெரிந்து சம்மந்தியிடம் பேசியிருக்கிறார்.
கருப்பு முருகானந்தம்: இந்நிலையில், தஞ்சை பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தம் உள்ளிட்ட பாஜகவினருடன் வாண்டையாரை சந்தித்த அண்ணாமலை, இது மரியாதை நிமித்தமான சந்திப்புதான் என்று விளக்கம் தந்துள்ளார்.. ஆனால், மரியாதை நிமித்தமான சந்திப்பு கிடையாது, அண்ணாமலை மொக்கை வாங்கியிருக்கிறார் என்றே காங்கிரசில் சொல்கிறார்கள்.
என்ன நடந்தது? என்று காங்கிரஸ் மற்றும் அமமுக என இரு தரப்பிலுமே நாம் விசாரித்தபோது, "தஞ்சையில் வாண்டையார் குடும்பத்துக்கென பேர் உண்டு. அவர் சொன்னால் அவரது பேச்சுக்கு முக்குலத்தோர் சமூகத்தினர் மரியாதை கொடுப்பார்கள். மாவட்டத்தில் செல்வாக்கு மிகுந்த வாண்டையார், சமீககாலமாகவே, காங்கிரஸில் "தாமரை இலை தண்ணீர்" போலத்தான் இருந்து வந்தார். குறிப்பாக, தஞ்சை தொகுதியை இந்த முறை காங்கிரஸ் வாங்க வேண்டும் என்று அழுத்தம் தந்திருந்தார்.
வாண்டையார்: ஆனால், திமுகவிடம் கொடுக்கப்பட்ட காங்கிரசின் விருப்பப்பட்டியலில் கூட, தஞ்சை தொகுதி கேட்கப்படவில்லை. இதனையறிந்து நொந்து போயிருந்தார் வாண்டையார்.
இதனை கருப்பு முருகானந்தம் மூலம் அறிந்த அண்ணாமலை, வாண்டையாரை பாஜக பக்கம் கொண்டு வர திட்டமிட்டு அவரிடம் பேசியிருக்கிறார் அண்ணாமலை. நீண்ட நேரம் பேசியதில் வாண்டையாரும் பாஜகவுக்கு வருவதற்கு சம்மதித்துள்ளார். இதனையடுத்தே, இதனை உறுதி செய்து கொள்ளவும் வெளிப்படை யாக அவரை கட்சியில் இணைப்பது குறித்து விவாதிக்கவும் அவரை சந்திப்பதற்காக தஞ்சைக்கு சென்றாராம் அண்ணாமலை.
திடீர் சந்திப்பு: இப்படி ஒரு சந்திப்பு நடக்கப்போவதையும், வாண்டையார் பாஜகவில் இணைய போகிறார் என்பதையும் அறிந்த தினகரன், பதறித்துடித்துவிட்டாராட்ம.. உடனே சம்மந்தியை தொடர்புகொண்டும் பேசியிருக்கிறார்.
அப்போது, "நீங்க எடுத்திருக்கும் முடிவு, அரசியல் ரீதியாக சரிபட்டு வராது. பாஜக கூட்டணியில் நான் இருக்கும்போது இத்தகைய முடிவை எடுத்தது சரியில்லை சம்மந்தி. நீங்கள் நினைக்கிற மாதிரியான கட்சி பாஜக கிடையாது. அதுவும் இல்லாமல், நான் ஒரு கட்சியை நடத்தி வருகிறேன். நீங்கள் காங்கிரசை விட்டு வெளியேற நினைத்தால், நம்முடைய கட்சியில் இணையலாமே ? எதற்கு பாஜக ? முடிவை மாற்றிக்கொள்ளுங்கள். அண்ணாமலையை சந்திக்க வர வேண்டாம் என சொல்லிவிடுங்கள்" என்றாராம்.
வாண்டையார்: தினகரன் இவ்வளவு சொன்னதுக்குபிறகுதான், தன்னுடைய முடிவை மாற்றிக் கொண்டாராம் வாண்டையார்.. எனினும், தினகரனிடம், "அவர் பக்கத்தில் வந்துவிட்டார், சந்திக்க வேண்டாம், திரும்பி விடுங்கள்" என சொன்னால் நாகரீகமாக இருக்காது. அதனால், வந்து சந்தித்துவிட்டு போகட்டும்" என வாண்டையார் சொல்லி விட்டாராம். இதற்கு பிறகுதான், தினகரனும் நிம்மதி அடைந்தாராம்.
இந்த நிலையில் அண்ணாமலை சந்தித்தபோது, "பாஜகவில் இணைவது இப்போதைக்கு வேண்டாம். குடும்பத்தினருக்கு விருப்பம் இல்லை" என வாண்டையார் சொன்னதுமே, அண்ணாமலைக்கு முகம் சோகமாகிவிட்டதாம்..
"பரபரப்பான ஒரு அரசியலை தஞ்சையில் அரங்கேற்ற நினைத்த அண்ணாமலைக்கு செக் வைத்து விட்டார் தினகரன்" என்று இந்த சந்திப்பின் பின்னணிகளை நமக்கு சுட்டிக்காட்டுகிறார்கள் தஞ்சை நிர்வாகிகள்..!!
-
பாஜக மட்டுமில்லை.. அண்ணாமலையால் தவெக - திமுக - அதிமுக - நாம் தமிழருக்கு விழும் பெரிய அடி -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
அண்ணாமலையின் ஒரே லிங்க்.. 16 லட்சம் பேரு..! தமிழக பாஜக கோட்டையில் பரபரப்பு.. திரும்பி பார்த்த டெல்லி -
"தமிழகத்தில் அண்ணாமலைக்கும் மன்சூர் அலிகானுக்கும் தான் போட்டி!" நக்கலடித்த தவெக எம்எல்ஏ முஸ்தபா -
இசட் பிரிவு பாதுகாப்பு விவகாரம்.. கட்சி தொடங்கிய கையோடு மத்திய அரசுக்கு அண்ணாமலை கடிதம்? -
அண்ணாமலையை நம்பி ஏமாறாதீங்க! ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் வேண்டாம்! நயினார் அட்வைஸ் -
அங்குட்டு போய் விளையாடுங்கப்பா.. அண்ணாமலை இயக்கம் ஆரம்பித்த அதே நாள்! குறுக்கே வந்த லதா ரஜினிகாந்த் -
அண்ணாமலை போடுவது மாரீச மான் வேடம்.. ஆர்எஸ்எஸ்-ன் 2,501 அமைப்பு அது.. சண்முகம் ஒரே போடு! -
அண்ணாமலை மாயமான்.. ஆர்எஸ்எஸ்-இன் புதிய அவதாரம்.. வீரமணி விமர்சனம் -
விஜய் ஸ்டைல் அரசியல்! கச்சிதமாக காய் நகர்த்தும் அண்ணாமலை.. உருவாகும் புது அரசியல் சக்தி?












Click it and Unblock the Notifications